Top 5 Best Web Series 2024: இந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான டாப் 5 வெப்சீரிஸ் லிஸ்ட் இதோ!
சென்னை: சர்வதேச ரசிகர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஆங்கிலம் முதல் இந்தி வரை பல வெப்சீரிஸ்களை களமிறக்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்தி வெப்சீரிஸான ஹீரமண்டி தமிழிலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
பிரம்மாண்ட படைப்புகளை வெளியிட்டு வரும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தை ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். மற்ற ஓடிடி தளங்களை விட இதற்கு சந்தா அதிகம் என்றாலும் படங்கள், வெப்சீரிஸ், வெப் ஷோக்கள் என ஏகப்பட்ட ஐட்டங்கள் அடல்ட் கன்டென்ட்டுடன் அடுக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞர்கள் அதிக சந்தாவாக இருந்தாலும் பரவாயில்லை என நெட்பிளிக்ஸை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களில் இதுவரை வெளியான வெப்சீரிஸ்களில் உலக அளவில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த டாப் 5 வெப் சீரிஸ் குறித்து இங்கே காணலாம்.
3 பாடி ப்ராப்ளம்: கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸை உருவாக்கிய டேவிட் பெனியாஃப் மற்றும் டிபி வெய்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள 3 பாடி பிராப்ளம் வெப் சீரிஸ் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. 1960-ல் இளம் பெண் ஒருவர் எடுக்கும் முடிவு சமீபகாலத்தில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதை சயின்ஸ் பிக்சன் கதையாக உருவாக்கி உள்ளனர்.

ஹீரமண்டி: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் உள்ளிட்ட நடிகைகள் இணைந்து நடித்த பிரம்மாண்டமான பீரியட் வெப்சீரிஸாக ஹீரமண்டி உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்பாக இருந்த இந்தியாவில் நவாபுகள் வெளிநாட்டில் படித்து வந்த பிறகு ஹீரமண்டி எனும் ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று வருவதும் அங்கே இருக்கும் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த வெப் சீரிஸ் அமைந்துள்ளது.

அவதார் - தி லாஸ்ட் ஏர்பென்டர்: ஹீரமண்டி வெப்சீரிஸை போல இந்த வெப்சீரிஸும் தமிழ் டப்பிங்குடன் இருக்கிறது. ஆல்பர்ட் கிம் இயக்கத்தில் உருவான இந்த வெப் சீரிஸ் அட்டகாசமான சிஜி காட்சிகள் உடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன் டே: 14 எபிசோடுகள் கொண்ட காதல் காவியமாக இந்த ஒன் டே வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது. அம்பிகா மோட் மற்றும் லியோ உடால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் காதலர்களுக்கான படைப்பாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் முன்னாள் காதலர்கள், அதே பழைய வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் விதமாக 96 பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிப்ளே: ஸ்டீவன் சைலியன் இயக்கத்தில் எலியட் சம்னர், ஆண்ட்ரூ ஸ்காட், டகோடா ஃபானிங் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் சைக்காலஜிக்கல் திரில்லராக உலக அளவில் ரசிகர்களை மிரட்டி வருகிறது. கருப்பு வெள்ளை படமாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் தான் இந்த ஆண்டு வெளியான வெப்சீரிஸ்களிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படங்களை பார்த்து போராடித்து விட்டால், ஓடிடியில் பார்க்க இத்தனை தரமான வெப்சிரீஸ்கள் உள்ளன. இந்த வாரத்தை இவற்றை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.



Click it and Unblock the Notifications