ரொம்ப எல்லை மீறி போறீங்கடா!.. ஹெலிகாப்டரில் ஹீரோயினுக்கு அர்ஜென்ட்டா வரதெல்லாம் ஓடிடியில் சீனாம்?
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான அட்டகாசமான காமெடி கலந்த ஆக்ஷன் வெப்சீரிஸ் தான் ஆப்லிடெரேட்டட் (Obliterated). 8 எபிசோடுகளுடன் வெளியான இந்த வெப்சீரிஸின் ஒவ்வொரு எபிசோடையும் ஒவ்வொரு இயக்குநர்கள் இயக்கி இருக்கின்றனர். ஆனால், ஒரே கதையில் உருவான இந்த வெப்சீரிஸ் கடைசி வரை ஒரே சீராகவும் காமெடிக்கும் ஆக்ஷனுக்கும் பிட்டு காட்சிகளுக்கு பஞ்சமின்றியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
முதல் காட்சியிலேயே லாஸ் ஏஞ்சல்ஸை வெடிகுண்டு வைத்து தகர்க்க ரஷ்யர்கள் செய்யும் சதித்திட்டத்தை ஹீரோயின் ஷெல்லி ஹென்னிங் மற்றும் அவரது டீம் முறியடித்து விடுகின்றனர்.

ஆப்லிடெரேட்டட் கதை: ஆனால், அவர்கள் டெஃப்யூஸ் செய்யும் பாம் போலியான ஒன்று என்று தெரிய வருகிறது. முதல் சீனிலேயே வில்லனை கைது செய்து விடுகின்றனர். ஆனால், உண்மையான வெடிகுண்டு அந்த நகரத்தையே அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த வெடிகுண்டை வில்லன் எங்கே வைத்திருக்கிறான் என விசாரித்து கண்டுபிடிக்க முடிவு செய்கின்றனர். ஆனால், அதில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. எப்படியாவது அந்த வெடிகுண்டை கண்டு பிடிக்க வேண்டும் என ஹீரோயினும் அவரது டீமும் முயற்சித்து வருகின்றனர்.
சந்தோஷ பார்ட்டி சோகமாகுது: முதல் சீனில் வில்லனிடம் உள்ளாடைகளை மட்டும் அணிந்துக் கொண்டு ஒரு ஐட்டம் போல நடித்து அவனது திட்டங்களை தெரிந்துக் கொண்டு அவனை மடக்கிப் பிடித்து கைது செய்கிறார் ஹீரோயின். அதன் பின்னர் குடியரசு தலைவர் உத்தரவுக்கு பிறகு தனது டீமுடன் சரக்கு பார்ட்டி மற்றும் போதை பார்ட்டி என கொண்டாட்டம் உச்சத்துக்கு செல்கிறது. ஹீரோய்னின் டீமில் உள்ள ஹேண்ட்ஸம் ஆன சீக்ரெட் ஏஜென்ட் நிக் ஜானோ தான் படத்தின் நாயகன். ஹீரோயினும் ஹீரோவும் உடலுறவு கொள்ளும் காட்சிகள் எல்லாம் வேறலெவல் 18 பிளஸ்ஸாகவும் அதே சமயம் காமெடி கலந்தும் உருவாக்கி உள்ளனர். ஆனால், அந்த பார்ட்டிக்கு நடுவே தான் அவர்கள் கண்டு பிடித்து வெடிகுண்டு இல்லை வெறும் குண்டு என்பது தெரிய வருகிறது.

ஹெலிகாப்டரில் அவசரம்: இன்னொரு ரஷ்யக்காரன் தான் வெளியே இருந்து அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து லாஸ் வீகாஸ் நகரையே அழிக்கப் போகிறான் என தெரிய வந்ததும் அவனை துரத்த ஹெலிகாப்டரில் செல்கின்றனர். அர்ஜென்டாக பார்ட்டியில் ஃபுல் சரக்குடன் கிளம்பி வந்த நிலையில், ஹீரோயினுக்கு அர்ஜென்ட்டாக பாத்ரூம் கூட போக முடியாத சூழல். அப்போது ஹெலிகாப்டரில் மற்றவர்களின் கண்களை மூடிக் கொண்டு பாத்ரூம் போகும் காட்சிகளும், விமானத்தில் ஏற்படும் தாக்குதல் காரணமாக ஹீரோ முகத்தில் எல்லாம் பாட்டிலில் பிடித்து வைக்கப்படும் சிறுநீர் பன்னீராக தெளித்து ஒரே கன்றாவியான காட்சியாக வெப்சீரிஸ் முழுக்க அடல்ட் காமெடிகளையும் தாண்டி அருவறுக்கத்தக்க காமெடிகளாக நிறைந்துள்ளன.
ஆனாலும் பார்க்கின்றனர்: இளைஞர்களை டார்கெட் செய்து ஒரு வெடிகுண்டு தாக்குதலில் இருந்து ஊரை காப்பாற்றும் பழக்கப்பட்ட அரத பழசான கதையாக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கும் ஆக்ஷனையும் தேவைக்கு அதிகமான ஆபாச காட்சிகளையும் இணைத்து வைத்து இளைஞர்களை பார்க்க வைத்து விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











