Salaar OTT: சலார் படத்தை 160 கோடிக்கு வாங்கியதா நெட்பிளிக்ஸ்?.. ஒரு மாதத்துக்கு முன்னாடியே ரிலீஸ்?

ஹைதராபாத்: டோலிவுட்டில் இந்த ஆண்டு சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட சீனியர் நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகின. ராம்சரணின் கேம் சேஞ்சர் அடுத்த ஆண்டுக்கு ரிலீஸ் தள்ளிப் போனது. அதே போல மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் பாடம் ஏகப்பட்ட மாற்றங்கள் காரணமாக அடுத்த ஆண்டு தள்ளிப் போயுள்ளது. ஜூனியர் என்டிஆரின் தேவரா படமும் அடுத்த ஆண்டு தான் ரிலீஸ். பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் அவுட்டான நிலையில், மீண்டும் பிரபாஸே தெலுங்கு இண்டஸ்ட்ரியை இறுதியில் காப்பாற்றி உள்ளார்.

கேஜிஎஃப் பட இயக்குநரான பிரசாந்த் நீல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கடுமையாக இந்த படத்துக்கு உழைத்தாலும் அதன் ரிசல்ட் பெரிதாக இல்லை என்றே விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஒட்டுமொத்த படத்தையும் லியோ படத்தை போல அன்பறிவ் மாஸ்டர்கள் தான் இயக்கி உள்ளனர் என்கிற விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், 4 வாரத்துக்கு முன்பாகவே ஓடிடியில் சலார் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

OTT: Prabhas Salaar will stream before Pongal 2024 on Netflix?

500 கோடி வசூல்: ஒரு வாரத்தில் சலார் திரைப்படம் 500 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹம்பலே தயாரிப்பு நிறுவனம் சலார் படத்துக்கு தனியாக ஒரு ட்விட்டர் பக்கத்தை உருவாக்கி அதில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இனி எதிர்காலத்தில் பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கும் இந்த ரூட் பயன்படுத்தப்பட்டால் வசூல் குறித்து பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பொங்கலுக்கு ஓடிடியில்: இந்த மாதம் டிசம்பர் 22ம் தேதி வெளியான சலார் திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதியே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகப் போவதாக ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 வாரங்கள் கூட புதிய படங்கள் தியேட்டரில் ஓடாத நிலை உள்ளதா என்றும் பொங்கலுக்கு புதிய படங்கள் வரும் நிலையில், சலார் ஸ்க்ரீனிங் குறைந்து விடும் என்பதால் முன் கூட்டியே இந்த ஏற்பாடு நடந்ததா என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

OTT: Prabhas Salaar will stream before Pongal 2024 on Netflix?

160 கோடி ரூபாய்: மேலும், சலார் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மட்டுமே 160 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும் டோலிவுட்டுக்கு சமீபத்தில் அதன் துணை சிஇஓ வந்து சென்ற நிலையில், பல டீலிங் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் நடைபெற்று இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அனிமல் முதல் ஹாய் நான்னா வரை: சலார் படம் மட்டுமின்றி ஜனவரி மாதம் நெட்பிளிக்ஸில் அனிமல், ஹாய் நான்னா உள்ளிட்ட படங்களும் வெளியாக காத்திருக்கின்றன. இந்திய ரசிகர்களை அதிகளவில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது டார்கெட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X