Sirai OTT: தியேட்டரில் சம்பவம் செய்த ‘சிறை‘.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கி கடந்த மாதம் தியேட்டரில் வெளியான படம் சிறை. இதில், விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்த இப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளிய நிலையில் இப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த 'டாணாக்காரன்' படத்தைத் தொடர்ந்து. மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'சிறை' என்ற பெயரில் கதையே எழுதி உள்ளார். இதில், தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் எல்.கே.அக்ஷய் குமார் அறிமுகமாகி உள்ளார்.

Sirai OTT Zee 5
Photo Credit:

சிறை படத்தின் கதை: ஆயுதப்படையில் ஏட்டாக இருக்கும், விக்ரம் பிரபு வேலூரில் இருந்து கைதியை பேருந்தில் அழைக்க செல்கிறார். அப்போது, விக்ரம் பிரபு மீது மிளகாய் பொடி தூவி, கைதியை கடத்தி செல்கிறார்கள். அந்த நேரத்தில் விக்ரம் பிரபு துப்பாக்கியால் கைதியை சுடுகிறார். இதனால், விக்ரம் பிரபு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். அந்த விசாரணையில் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், மாணவிகள் என அனைவரும் இருக்கும் பொது இடத்தில் எப்படி நீங்கள், துப்பாக்கியால் சுடலாம் என்று கேள்வி கேட்கப்படுகிறது. அப்போது விக்ரம் பிரபு ஆயுதப்படையில் இருக்கும் பிரச்சனையில் பேசுகிறார். அதிலிருந்து படம் தொடங்குகிறது.

ஓடிடி ரிலீஸ்: இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு அனைவரையும் அசரவைத்துவிட்டது என அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியான ஒரு மாற்றத்தை கொண்டு வந்து, ஆடியன்சை ஷீட்டின் நுனியில் அமர வைத்துவிட்டார் என சிறை படத்தை பார்த்த அனைவரும் படத்தை கொண்டாடினார்கள். படம் நல்ல வசூலை அள்ளி மாஸ் காட்டிய இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வரும் 23ந் தேதி வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தியேட்டரில் படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X