OTT: மிஸ் பண்ண கூடாத மலையாள படங்கள்.. சேட்டன்களின் அசத்தலான லிஸ்ட் இதோ!

திருவனந்தபுரம்: சினிமா ரசிகர்கள் பலரும் திரையரங்கில் வெளியாகி ஹிட் ஆகும் மாற்று மொழி படங்களை ஓடிடி தளத்தில் கண்டு களித்து வருகின்றனர். அப்படத்தை பார்ப்பதோடு மட்டும் அல்லாமல் ரைட்அப்களையும் எழுதி சிலாகிக்கின்றனர். பிறமொழி படங்கள் தற்போது அவர்களது கைகளுக்குள் அடங்கி கிடக்கிறது. ஓடிடி தளங்களின் வருகைக்கு பிறகு உலக சினிமாவே ரசிகர்களின் கையில் தான் உள்ளன. அந்த வகையில் கடந்தாண்டு வெளியான மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சிறிய கதைதான் பெரிய அளவில் பேசும்படியான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த படங்களை கண்டிப்பாக நீங்கள் மிஸ் பண்ண வேண்டாம்.

PONMAN: கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான பொன்மான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. பாசில் ஜோசப், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வரதட்சணையை மையப்படுத்தி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. பெண்கள் நகை அணிந்தால் தான் அழகு. அது இருந்தால் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என காலம் காலமாக பேசி வந்த பிரச்னையை இப்படம் அடித்து நொறுக்கியிருக்கிறது. வரதட்சனை கொடுமையால் ஒரு குடும்பம் படும் அவஸ்தையை டார்க் காமெடி ரகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

Purushtha Pretham: சோனி லிவ் ஓடிடியில் புருஷ்த பிரேதம் படம் காண கிடைக்கிறது. 2 மணி நேரம் கொண்ட இப்படம் ரொம்ப கலகலப்பாக நகர்கிறது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படமான இப்படம் கடைசி அரைமணி நேரம் த்ரில்லராக நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. எதற்கெடுத்தாலும் பில்டப் எதிர்பார்க்கும் ஒரு காவல்துறை அதிகாரியிடம் சிக்கும் பிணமும், அதையொட்டி நடக்கும் போராட்டத்தை பற்றி எடுத்துரைக்கிறது.

ott release for malayalam movie list

Thinkalazhcha Nishchayam: இந்தியாவில் காதல் என்றால் கெட்ட வார்த்தை, காதலித்தால் குடும்பத்தை தள்ளி வைப்பது, அந்த குடும்பத்தை அநாகரீகமாக பேசுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறுகிறது. அதேபோன்ற குடும்பத்தை பற்றிய படம் தான் Thinkalazhcha Nishchayam. மிக எளிமையான குடும்பத்தை சேர்ந்த முதல் மகள் ஒருவரை காதலித்து கரம்பிடிக்கிறார். இதனால், இளைய மகளுக்கு தந்தை மாப்பிள்ளை பார்க்கிறார். தனது முதல் மகளை போன்றே அந்த பெண்ணும் வீட்டிலிருந்து வெளியேற திட்டமிடுகிறார். இதில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். முதல் பாதியில் காமெடியாக நகரும் கதை பிற்பாதியில் சீரியஸாக இருக்கிறது. காதலித்து ஒரு பெண் வீட்டை விட்டு ஓடுவதால் அந்த குடும்பத்தின் பாதிப்பை பிரதிபலிக்கிறது. இப்படம் சோனி லிவ் ஓடிடியில் உள்ளது.

ரேகாசித்திரம்: நடிகர் ஆசிப் அலி நடிப்பில் உருவான இப்படம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 40 வருட கொலை வழக்கை துப்பறியும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஆசிப் அலி கட்சிதமாக பொருந்தியிருப்பார். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்தில் அனஸ்வரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். த்ரில்லர் வகையை காண விரும்புவோருக்கு சிறந்த படமாக இருக்கும். இப்படம் சோனி லிவ் ஓடிடியில் உள்ளது.

ott release for malayalam movie list

ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி: நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியான ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி இன்வெலஸ்டிகேசன் த்ரில்லர் வகையை சேர்ந்த படம் தான். ஒரு சிறிய திருட்டு கேஸ் அவரிடம் வருகிறது அதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது விறுவிறுப்படைகிறது படம். ஒரு மிகப்பெரிய திருட்டு கும்பல் திட்டம் போட்டு கொலை செய்து பண திருட்டில் ஈடுபடுவதை கண்டுபிடிப்பது தான் கதை. ஆனால், மிக கச்சிதமாக நுனி சீட்டில் அமர்ந்து பார்க்கும் விறுவிறுப்பை தருகிறது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X