ஓடிடி ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?

சென்னை: திரையில் வெளியாகும் படங்களை போன்று வாரம் வாரம் ஓடிடியிலும் புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகின்றன. ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றியடைந்த படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் புது வரவாக விமல் நடித்த வெப் தொடர் மற்றும் சர்ச்சைகளோடு வெற்றி அடைந்த ஃபயர் போன்ற படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. அதுகுறித்து இதில் காணலாம்.

ஃபயர்: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலாஜி, ரச்சிதா, சாந்தினி தமிழரசன், சாக்சி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஃபயர். இப்படத்தை சதீஷ்குமார் இயக்கியிருந்தார். இப்படம் நாகர்கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் சாக்சி அகர்வால் கவர்ச்சி மற்றும் அழகால் ரசிகர்களை ஈர்த்தார். அதனோடு, ரச்சிதா மகாலட்சுமி கடன் கொடுத்தவனிடம் சிக்கி படும் அவஸ்தைகளை கண்முன்னே காட்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த படம் கொடுத்த வெற்றியால் பாலாஜிக்கு தங்க செயினை பரிசாக அளித்தார் தயாரிப்பாளர். இப்படத்திற்கு பிறகு பிக்பாஸ் பாலாஜி ஃபயர் பாலா என அழைக்கப்படுகிறார். இப்படம் டெண்டுகொட்டா, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ott-release-new-movies-and-web-series-update

ஓம் காளி ஜெய் காளி: விலங்கு வெப் தொடரின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேற்று வெளியாகியிருக்கிறது. இத்தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில், விமல், புகழ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். சாமி பெயரில் நடக்கும் கொலைகள் அதற்கு பின் அமானுஷ்யங்களை விளக்குவது தான் கதை. பெரும் எதிர்பார்ப்போடு ஓம் காளி ஜெய் காளி தொடரின் முதல் 5 எபிசோடுகள் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் அடுத்த 5 எபிசோடுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அகத்தியா: சினிமா பாடல் ஆசிரியராக திரையுலகில் அறிமுகம் பெற்று தற்போது இயக்குநராக மாறியுள்ளார். கடந்தாண்டு இவரது இயக்கத்தில் வெளியான அகத்தியா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஜீவா ராக்ஷி கண்ணா, யோகி பாபு, குமரவேல், ரோகினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ott-release-new-movies-and-web-series-update

சப்தம்: ஈரம் படத்திற்கு பிறகு இயக்குநர் அறிவழகன் - ஆதி காம்போவில் உருவான படம் சப்தம். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. இப்படம் அதிக சத்தத்தால் ரசிகர்களுக்கு கதை புரியவில்லை என விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பேய் படத்தில் புதுக்களமாக இருந்தன. இப்படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ott-release-new-movies-and-web-series-update

அதேபோன்று ஹாலிவுட் படங்களான முஃபாசா தி லையன் கிங் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த லாஸ்லியா, ஹரி பாஸ்கர் நடித்துள்ள ஹவுஸ் கீப்பிங் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. சிங்கம்புலி நடிப்பில் உருவாகியுள்ள நாய்கள் ஜாக்கிரதை வெப் தொடரும் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X