“டீப் வாட்டர்“ உளவியல் த்ரில்லர் மூவி… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

சென்னை : திரையரங்குகளில் மட்டுமே படம் பார்த்து பழகிப்போன நமக்கு, ஓர் புதுவிதமான அனுபவத்தை கொடுத்தன ஓடிடி தளங்கள். கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதை ஓடிடி தளங்கள் தழைத்து இந்திய சந்தையில் ஆழமாக வேரூன்றி உள்ளன.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ், ஆஹா, ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், ஜீ5 போன்ற சர்வதேச ஓடிடி தளங்களின் முக்கிய சந்தையாக இந்தியா பார்க்கப்படுகிறது.

மார்ச் 11ந் தேதி தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் வெளியான நிலையில், இந்த ஓடிடியில் வெளியாகும் திரைப்படம் என்ன என்ன என்று பார்க்கலாம்.

எப்ஐஆர் (தமிழ் )

எப்ஐஆர் (தமிழ் )

விஷ்ணு விஷால் நடித்த எப்ஐஆர் என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்தது என்றும் செய்திகள் வெளியானது. திரில்லிங் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசான் பிரைமில் மார்ச் 12ந் தேதி வெளியானது.

செபாஸ்டியன் பிசி 524(தெலுங்கு)

செபாஸ்டியன் பிசி 524(தெலுங்கு)

பாலாஜி சய்யபுரெட்டி இயக்கியுள்ள "செபாஸ்டியன் பிசி 524" இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கோமலி பிரசாத், ரோகினி, சூர்யா, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் மார்ச் 4ந் தேதி திரையில் வெளியான நிலையில், மார்ச் 18ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

டீப் வாட்டர் (ஆங்கிலம் )

அமேசான் பிரைமில் மார்ச் 18ந் தேதி வெளியாக உள்ள திரைப்படம் டீப் வாட்டர். இத்திரைப்படம் பாட்ரிசியா ஹைஸ்மித்தின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு உளவியல் த்ரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அசாதாரண பயணத்தை படம் விவரிக்கிறது. இத்திரைப்படத்தில் ட்ரேசி லெட்ஸ், ரேச்சல் பிளான்சார்ட், லில் ரெல் ஹோவரி, ஃபின் விட்ராக், ஜேக்கப் எல்ரோடி, ஜேட் பெர்னாண்டஸ், மைக்கேல் பிரவுன் மற்றும் மைக்கேல் சியாலப்பா ஆகியோர் நடித்துள்ளனர்.

Eternally Confused and Eager for Love(ஆங்கிலம் )

Eternally Confused and Eager for Love(ஆங்கிலம் )

21ம் நூற்றாண்டில் செக்ஸ், காதல், காதலைத்தாண்டிய உறவு புரியால் தவிக்கும் 24 வயது இளைஞரைப்பற்றி இணையத் தொடர்தான் "Eternally Confused and Eager for Love". ஜோயா அக்தர் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரால் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர், Netflixல் மார்ச் 18ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ராகுல் போஸ், சுசித்ரா பிள்ளை, தலாய் மற்றும் அங்கூர் ரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜல்சா (இந்தி)

ஜல்சா (இந்தி)

பாலிவுட் பிரபல நடிகை வித்யா பாலன் பத்திரிக்கையாளராக நடித்திருக்கும் இந்தி திரைப்படம் ஜல்சா. சமூதாயத்தில் வன்மத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அமேசான் பிரைமில் மார்ச் 18ந் தேதி வெளியாகிறது. சுரேஷ் திரிவேணி இயக்கிய இப்படத்தில் ஷெபாலி ஷா, ரோகினி ஹட்டங்கடி, இக்பால் கான், விதத்ரி பாண்டி, ஸ்ரீகாந்த் மோகன் யாதவ், ஷபீன் படேல் மற்றும் சூர்யா காசிபட்லா ஆகியோரும் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X