OTT release this month: போர் தொழில் டு மாவீரன்.. ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

சென்னை: டிக்கெட் விலை மற்றும் பாப் கார்ன், பப்ஸ் விலை தியேட்டரில் அதிகரித்த நிலையில் இருந்தே பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் மட்டும் தியேட்டருக்கு போவோம் என்கிற மன நிலையில் பெருவாரியான பொதுமக்கள் மாறிவிட்டனர்.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பது, முன்பெல்லாம் புதிய படம் வந்தால் 3 மாதங்களுக்குப் பிறகு தான் இந்தியத் தொலைக்காட்சிகளில் என படத்தை டிவியில் வெளியிடுவர்.

ஆனால், இப்போ ஓடிடி வந்த உடன் 4 வாரங்களிலேயே எந்தவொரு புதிய படமாக இருந்தாலும், ஓடிடியில் வெளியாகி விடுவதால், ஒரு மாதம் கழித்து புதிய படங்களை வீட்டிலோ டிவியிலோ அல்லது ஸ்மார்ட் போனிலோ பார்த்துக் கொள்ளலாம் என ஆகிவிட்ட நிலையில், இந்த ஆகஸ்ட் மாதம் அப்படிப்பட்ட ஓடிடி ரசிகர்களை மகிழ்விக்க அமேசான் முதல் நெட்பிளிக்ஸ் வரை அனைத்து ஓடிடிகளிலும் வெளியாக காத்திருக்கும் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம் வாங்க..

OTT releases for August 2023: Por Thozhil to Maaveeran will stream soon on OTT giants

போர்த்தொழில்: அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர்த் தொழில் படம் தியேட்டரிலேயே 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 75 நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அந்த படத்தையும் இதுவரை தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் எப்போ என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் போர்த்தொழில் ரிலீஸ் ஆகிறது.

தி ஹன்ட் ஃபார் வீரப்பன்: அதே ஆகஸ்ட் 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் The Hunt for Veerappan எனும் டாக்குமென்ட் சீரிஸ் வெளியாகிறது. 4 பாக சீரிஸாக உருவாகி உள்ள இதனை அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய ஆவணப் படம் என்பதால், இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நெட்பிளிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேட் இன் ஹெவன் சீசன் 2: பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்திய சோபிதா துலிபாலா தொடர்ந்து ஏகப்பட்ட ஓடிடி வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான நைட் மேனேஜர் சீசன் 2 ஓடிடி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த நிலையில், அடுத்ததாக மேட் இன் ஹெவன் சீசன் 2 மூலம் மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறார் சோபிதா துலிபாலா. அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்த தொடர் வெளியாகிறது.

ஆலியா பட்டின் ஹாலிவுட் படம்: பாலிவுட் நடிகை ஆலியா பட் ஹாலிவுட் நடிகை வொண்டர் உமனான கால் கடோட்டுக்கே வில்லியாக நடித்துள்ள ஹார்ட் ஆஃப் தி ஸ்டோன் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரெய்லர் உலக ரசிகர்களை மிரட்டிய நிலையில், ஹார்ட் ஆஃப் ஸ்டோன் திரைப்படம் ரசிகர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது கன்ஃபார்ம்.

சுதந்திர தினத்துக்கு மாவீரன்?: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் நடிப்பில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியான மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரை மாவீரன் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் பிரைம் வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X