மாஸ் காட்டும் ஓடிடி ரிலீஸ்.. துணிவு முதல் ஃபார்ஸி வரை.. என்ன படம் பார்க்கலாம்!

சென்னை : ஓடிடி தளங்களின் வளர்ச்சியை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என கணக்கெடுத்தால், ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபரிமிதமாகவே உள்ளது.

வெளிநாடுகளில் கோலோச்சிய ஓடிடி தளங்கள் தற்போது இந்தியாவில் சக்கைப்போடு போட்டு வருகின்றன.

தியேட்டரில் வெளியாகும் படங்களுக்கு நிகராக ஓடிடி தளங்களிலும் வாரா வாரம் திரைப்படங்கள் வெப்தொடர்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று பார்க்கலாமா?

 துணிவு

துணிவு

எச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் நடித்த துணிவு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பிப்ரவரி 8ந் தேதி வெளியானது. சாமானியர்கள் மீதான வங்கிகளின் அத்துமீறல்களை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரேவேற்பை பெற்று, உலக அளவில் வசூலை வாரிக்குவித்தது. ஓடிடியில் படம் வெளியானாலும் இன்னமும் தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் உள்ளது.

லவ் ஷாதி டிராமா

லவ் ஷாதி டிராமா

நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிப்ரவரி 10ந் தேதி வெளியானது. லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் வெளியாகி உள்ள திருமண வீடியோவின் முதல் எபிசோடில், ஹான்சிகா சோஹேலை திருமணம் செய்து கொண்ட போது எதிர்கொண்ட சங்கடங்களை வருத்தத்துடன் பகிர்ந்து உள்ளார். மேலும், யாருடைய வாழ்க்கை பற்றியும் தேவையில்லாமல் பேசக் கூடாது என ஹன்சிகா கண்ணீருடன் பேசி உள்ளார்.

பாக்தாத் சென்ட்ரல்

பாக்தாத் சென்ட்ரல்

போர் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் பிளவுபட்ட ஒரு நாட்டில் வசிப்பவர்களின் அனுபவங்களையும் சொந்த நாட்டில் கைதியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த பாக்தாத் சென்ட்ரல் (BAGHDAD CENTRAL) தொடர் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. இந்த புதிய தொடரை பிப்ரவரி 17ந் தேதி முதல் MX பிளேயரில் பார்க்கலாம். இத்தொடரை ஸ்டீபன் புட்சார்ட் மற்றும் எலியட் கோலா எழுதியுள்ளனர். ஆலிஸ் ட்ரொட்டன் மற்றும் பென் ஏ. வில்லியம்ஸ் இயக்கியுள்ளனர்.

CARNIVAL ROW SEASON 2

CARNIVAL ROW SEASON 2

பிரைம் வீடியோவில், ஆர்லாண்டோ ப்ளூம் மற்றும் காரா டெலிவிங்னே நடித்த 'கார்னிவல் ரோ' ஒரு கற்பனை கலந்த நாடகத்தின் இரண்டாவது சீசன் ஆகும். நவ நாகரிக மனிதர்களால் கைப்பற்றப்பட்ட பழம்பெரும் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் விக்டோரியன் கற்பனை உலகை சுற்றி இந்த கதை நகர்கிறது. இந்த தொடர் அமோசன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 17ந் தேதி முதல் பார்க்கலாம்.5

ட்ரூ ஸ்பிரிட், வீ ஹேவ் எ கோஸ்ட்

ட்ரூ ஸ்பிரிட், வீ ஹேவ் எ கோஸ்ட்

ட்ரூ ஸ்பிரிட் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு ஒரு இளைஞன், யாருடைய உதவியின்றி உலகம் முழுவதும் பயணம் செய்த ஜெசிகா வாட்சனின் உண்மை வாழ்க்கைக் கதையை மையமாக உருவாக்கப்பட்ட கதையாகும். 7 மாதங்களில் 35,000 கிமீக்கும் அதிகமான பயணம் செய்த அந்த இளைஞனின் தைரியம், ஆர்வம், தோல்வி மற்றும் இறுதி சாதனை ஆகியவற்றை இந்த படம் காட்டுகிறது. கிளிஃப் கர்டிஸ், அன்னா பக்வின், டீகன் கிராஃப்ட் நடித்த இந்த பட்ம் நெட்பிளிக்ஸில் பிப்ரவரி 26ந் தேதி பார்க்கலாம்.

We Have a Ghost

We Have a Ghost

வீ ஹேவ் எ கோஸ்ட் பிப்ரவரி 24ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம். இதில், ஜெனிஃபர் கூலிட்ஜ் மற்றும் அந்தோனி மேக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு பேய் வீட்டை ஆக்கிரமித்து வேட்டையாடுகிறது. இதில் இருந்த அந்த குடும்பம் எப்படி தப்பித்தது என்பதை திகிலுடன் இந்த படம் நகர்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X