காமெடி முதல் ஆக்‌ஷன் வரை! இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள், வெப் சீரீஸ் லிஸ்ட் இதோ!

சென்னை: ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானதில் இருந்து மக்கள் பலரும் ஓடிடி தளங்களில் படங்கள் பார்ப்பதை விரும்புகின்றனர். தங்களுக்கு ஏற்ப நேரத்தில் தங்களுக்கு சௌகரியமான இடங்களில் ஓடிடி வாயிலாக படங்கள் பார்த்து விட முடியும் என்பதால் நாளுக்கு நாள் ஓடிடியில் படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்து பார்க்கலாம்.

1. சட்னி சாம்பார்: நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நாளை முதல் அதாவது ஜூலை 26ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள நகைச்சுவை வெப் சீரீஸ் சட்னி சாம்பார். இந்த வெப் சீரீஸை இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் யோகி பாபுவுடன் நிழல்கள் ரவி, வாணிபோஜன், மைனா நந்தினி, சந்திரன், நிதின் சத்யா, இளங்கோ குமரவேல் காயத்ரி ஷான், தீபா, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

OTT

2. தி மினிஸ்ட்ரி ஆஃப் அன்ஜென்டில்மேன்லி வார்ஃபேர்: இந்த வாரம் கட்டாயம் பார்க்க வேண்டிய புதிய ஓடிடிரிலீஸ்களில் ஒன்று, தி மினிஸ்ட்ரி ஆஃப் அன்ஜென்டில்மேன்லி வார்ஃபேர் என்ற அதிரடி நகைச்சுவைப் போர் திரைப்படமாகும். இந்த திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் வரலாற்றில் முதல் சிறப்புப் படைகள் பணியை உருவாக்க வழிவகுத்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது அமேசான் பிரைமில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகின்றது.

OTT

3. கிளியோ - சீசன் 2: இந்த வாரத்தின் புதிய ஓடிடிரிலீஸ்களில் நெட் ஃபிளிக்ஸ்விவியன் அன்டெரெகென் மற்றும் ஜானோ பென் சாபனே ஆகியோரின் வேகமான ஸ்பை த்ரில்லர் தொடரான ​​கிளியோவின் இரண்டாவது சீசன் அடங்கும். இந்த ஜெர்மன் மொழி ஸ்பை அதிரடி திரில்லர் தொடரில், முன்னாள் கிழக்கு ஜெர்மன் உளவாளி கிளியோ ஸ்ட்ராப்பாக ஜெல்லா ஹாஸ் நடிக்கிறார். பனிப்போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் அமைக்கப்பட்டு, ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் மறுசீரமைப்புத் திட்டத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இரகசிய ஆவணங்களைக் கொண்ட சிவப்பு சூட்கேஸை கைப்பற்றுவதை மைய்யமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் கதாநாயகி ஜெல்லா ஹாஸ். இது நெட் ஃபிலிக்ஸில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகின்றது.

OTT

4. பய்யா ஜி: இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஓடிடி ரிலீஸ்களில் ஒன்று அதிரடி திரைப்படமான பாய்யா ஜி. இந்த திரைப்படம் மனோஜ் பாஜ்பாயின் 100வது படம் ஆகும். அபூர்வ் சிங் கார்க்கி இயக்கியுள்ளார். கதைப்படி பீகாரில் உள்ள சீதாமண்டி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் வசிக்கும் அனைவரையும் பயமுறுத்தக்கூடிய குற்றவாளியான ராம் சரண் திரிபாதியின் பாத்திரத்தை சித்தரிக்கிறார். தனது சகோதரன் கொல்லப்பட்டதால் கோபமடைந்த பையா ஜி தனது தம்பியின் கொலையில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் தேடித் தேடிக் கொள்கின்றார். இந்த படம் கிட்டத்தட்ட ஜான் விக் படங்களின் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. இது ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை முதல் ஸ்ட்ரீம் ஆகின்றது.

OTT

5. பாரடைஸ்: மலையாள நகைச்சுவைப் படமான பாரடைஸ் படம் நாளை முதல் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதில் தர்ஷன ராஜேந்திரன், ரொஷான் மேத்யூ, மகேந்திர பெரேரா மற்றும் ஷியாம் பெர்னாண்டோ ஆகியோர் நடித்துள்ளனர். நாளை ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X