OTT Releases This Week : இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன!
சென்னை : நெட்பிளிக்ஸ், ஜீ 5 , அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் இந்த வாரம் பல படங்கள் வெளியாக உள்ளன.
கடந்த வாரம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கூப், அசுர் வெப் சீரிஸ், பொன்னியின் செல்வன் 2 போன்றவை வெளியாகின
இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்

அவதார் தி வே ஆஃப் வாட்டர் : அவதார் 2 திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான அவதார் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றத்தைத் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் அவதார் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி 160 மொழிகளில் 52,000 திரையரங்குகளில் வெளியானது. மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது.

ப்ளடி டாடி : ஷாஹித் கபூரின் வித்தியாசமான நடிப்பில் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ப்ளடி டாடி. இப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியான "ஸ்லீப்லெஸ் நைட்" என்ற பிரெஞ்சு திரைப்படத்தின் ரீமேக்காகும். இதில் டயானா பென்டி, சஞ்சய் கபூர், ரோனித் போஸ் ராய், ராஜீவ் கண்டேல்வால், விவான் பத்தேனா, ஜெய்ஷன் குவாட்ரி, அங்கூர் பாட்டியா, முகேஷ் பட், சர்தாஜ் கக்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜியோ சினிமா ஓடிடியில் ஜூன் 9ந் தேதியில் இருந்து பார்க்கலாம்.

2018: Everyone Is A Hero : டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளம், தமிழ், தெலுங்கில் மே 5ந் தேதி வெளியானத் திரைப்படம் 2018: Everyone Is A Hero. 2018ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான கேரளா வெள்ளத்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இதில், இந்திரன்ஸ், குஞ்சாக்கோ போபன், அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன், ஆசிப் அலி, லால், நரேன், தன்வி ராம், ஷிவதா, கலையரசன், அஜு வர்கீஸ், சித்திக், ஜாய் மேத்யூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சோனிலிவில் ஜூன் 9ந் தேதியில் இருந்து பார்க்கலாம்.

Never Have I Ever 4 : நெவர் ஹேவ் ஐ எவர் 4 புதிய காதல் மற்றும் சாகசத்தைப் பற்றிய கதை ஆகும். அதில் மைத்ரேயி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். இன்றைய நவீன காலத்து பெண்களின் சிக்கலான வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதையில் ராமகிருஷ்ணன் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தள்ளார். இயக்குநர் மிண்டி கலிங் இயக்கத்தில் உருவான இப்படத்தை ஜூன் 8ந் தேதியில் இருந்து நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











