கன்றாவி.. கணவன் கண்முன்னே மற்ற ஆண்களோடு கசமுசா.. இப்படியொரு படமா?.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

சென்னை: பேட்மேன் ஆக பல படங்களில் மிரட்டிய பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் மற்றும் ஹாலிவுட்டின் யங் சென்சேஷன் நடிகையான அனா டி அர்மஸ் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் தான் டீப் வாட்டர் (Deep Water). நான் என்ன வேணாலும் பண்ணுவேன், என்னை எதுவுமே கேட்கக் கூடாது என்கிற ரேஞ்சில் ஹீரோயின் கணவன் கண்முன்னே கன்றாவித்தனம் பண்ணி வரும் நிலையில், அதற்கு எதிர்வினையாக கணவன் என்ன செய்கிறார் என்பதை செம த்ரில்லராக சொல்லியிருக்கும் படம் தான் இந்த டீப் வாட்டர்.

ஃபேட்டல் அட்ராக்‌ஷன், இண்டீசண்ட் புரொபஸல், லோலிட்டா, அன்ஃபெயித்ஃபுல், பிளாக் ரோட்ஸ் என ஏகப்பட்ட அடல்ட் படங்களை எடுத்து ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் அட்ரியன் லைனே இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தான் இந்த டீப் வாட்டர். அந்த இயக்குநருக்கு இப்போ 84 வயதாகிறது என்பது கூடுதல் தகவல். 82 வயதிலும் இப்படியொரு கில்மா கதையை எடுத்து வச்சிருக்காரே என ஹாலிவுட்டில் பேசாத வாய்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு படம் செம வொர்த்.

சரி படத்தின் கதை என்ன? அனா டி அர்ம்ஸ் எந்தளவுக்கு தாராளம் காட்டி நடித்திருக்கிறார், பென் அஃப்லெக் மனைவிக்காக அமைதியாக இருப்பது போல செய்யும் மர்மமான செயல்கள் என்ன இந்த படத்தை எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

டீப் வாட்டர் கதை: ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைகளை உருவாக்கி அதை படங்களாக எடுத்து வருகின்றனர். ஏகப்பட்ட சைக்கோ படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படம் ரொம்பவே வித்தியாசமான சைக்கோ படமாக உள்ளது. மெலிண்டா எனும் கதாபாத்திரத்தில் அனா டி அர்மஸ் நடித்திருக்கிறார். அவருடைய கணவராக விக் வாலன் ஆலன் கதாபாத்திரத்தில் நம்ம பேட்மேன் ஹீரோ ஜெனிஃபர் லோபஸின் எக்ஸ் கணவர் பென் அஃப்லெக் நடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது.

OTT Review Ben Affleck and Anna de Armas s Deep Water Review in Tamil
Photo Credit:

கணவன் கண்முன்னே: ஆரம்பத்தில், ஒரு பார்ட்டிக்கு செல்ல, படு கவர்ச்சியாக கருப்பு நிற உடையை அணிந்திருக்கும் ஹீரோயின், கணவரை அன்பாக அழைத்து கருப்பு டிரெஸ் ஓகேவா, இல்லை இந்த சிகப்பு டிரெஸ் போட்டுக்கவான்னு கேக்குறாங்க, மேலும், நான் வாங்கித்தந்த ஷூவை போட்டுக்கோ என சொல்ல, நீயே போட்டுவிடேன்னு சொல்ல செம ரொமான்ஸ் இருக்கும் போல என்கிற மனநிலையுடன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, அடுத்த காட்சியே அவர்கள் செல்லும் பார்ட்டியில், ஜோயல் என்பவருடன் நெருக்கமாக லிப் கிஸ் அடித்து கசமுசா செய்கிறார், மாடியில் இருந்துக் கொண்டு கணவர் அதை பார்க்க, ஒரு தோழி ஒருத்தி, அவரோட மனைவி பத்தி பேசுறாங்க, அதன் பின்னர், அந்த ஜோயல் என்பவர் ஹீரோவிடம் வந்து நக்கல் செய்வது போல, உங்களுக்கு பொறாமை ஏதுமில்லையா? என்று கேட்கிறார். இதற்கு முன் ஒருத்தன் என் மனைவி கூட இப்படித்தான் பழகினான், அப்புறம் அவன் மிஸ்ஸிங்னு ரொம்ப நாளா தேடுறாங்கன்னு சொல்ல, என்ன ஆச்சு, என பயந்துக் கொண்டே ஜோயல் கேட்க, ஒண்ணுமில்ல, நான் தான் கொன்னுட்டேன் சொல்ல, அவனுக்கு டர்ராகி விடுகிறது.

எந்த ஓடிடியில் பார்க்கலாம்: பார்ட்டியில் இருந்து பதறியடித்துக் கொண்டு ஓடிவிடுகிறான். தனது புதிய நண்பனிடம் என்ன சொன்ன என கணவரிடம் பஞ்சாயத்து கிளப்ப, எதுவும் சொல்லவில்லை என்று ஹீரோ சொல்கிறார். அதன் பின்னர், மீண்டும் தனது வீட்டுக்கே அவனை அழைத்து வந்து உல்லாசமாக இருக்க அதையும் பார்க்கும் ஹீரோ, இவனுக்கும் ஒரு பாயாசத்தை போட்டு விட வேண்டியது தான் என முடிவு கட்டுகிறார். அடுத்தடுத்து மனைவி மற்ற ஆண்களுடன் தவறான உறவில் கணவன் கண்முன்னே ஈடுபட, அவர்கள் காணாமல் போகின்றனர். கடைசியில் என்னதான் ஆகிறது என்கிற ட்விஸ்ட் உடன் இந்த படத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார். அமேசான் பிரைம் ஓடிடியில் ஆங்கிலத்தில் உள்ளது. ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதால், குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.

More from Filmibeat

Read more about: hollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X