OTT Review: அம்மாவுடன் ஹனிமூன் போகும் மகன்.. அடக்கொடுமையே.. 'Honeymoon Crasher' படம் பார்த்தீங்களா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான அட்டகாசமான காமெடி படம் தான் இந்த ஹனிமூன் கிரேஷர் (Honeymoon Crasher). பிரெஞ்சு மொழியில் வெளியான இந்த படத்தின் உண்மையான டைட்டில் அம்மாவுடன் ஹனிமூன் என பிரெஞ்சு மொழியில் இடம்பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி வெளியான இந்த படத்தின் விமர்சனத்தையும் அம்மாவுடன் மகன் ஹனிமூனுக்கு சென்றது ஏன்? எதற்காக? என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..

வெளிநாடுகளில் எல்லாம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே எந்தவொரு பிணைப்பும் பாசமும் இருக்காது என்றே பல படங்களில் காட்டி வரும் நிலையில், அம்மாவுக்கும் மகனுக்கும் இடையேயான ஒரு பாசப் போராட்டத்தை நகைச்சுவை படமாகவும் இளைஞர்களை கவரும் விதமாக கவர்ச்சி படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிக்கோலஸ் குச்சே.

OTT OTT Review Honeymoon Crasher

ஹீரோவின் திருமணத்தின் போது மணமகள் எக்ஸ் லவ்வருடன் ஓடிப்போக அம்மாவுடன் ஹனிமூனுக்கு போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் ஹீரோவின் சங்கடமான சூழலும் அதை சுற்றி அரங்கேற்றப்படும் காமெடி டிராமாவும் வொர்க்கவுட் ஆனதா? அனைத்து விதமான ரசிகர்களும் இந்த படத்தை நெட்பிளிக்ஸில் பார்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விரிவாக இங்கே காணலாம்.

ஹனிமூன் கிரேஷர் கதை: கதையின் நாயகன் லூகாஸ் - எலோடியை திருமணம் செய்ய சர்ச்சில் இருக்கும் போது திடீரென எலோடியின் தோழிகளின் செல்போன் அடித்து திருமணத்தை தடை செய்கின்றன. எலோடியின் முன்னாள் காதலன் திடீரென எலோடியை காதலிப்பதாக சொல்ல தனது காதலனுடன் ஓடிப்போகிறாள். திருமணம் நின்ற விரக்தியை விட தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் வைத்து ஹனிமூனுக்காக மொரிஷியஸ் செல்ல பிளான் செய்திருந்தது வீணாகிவிட்டதே என ஹீரோ கதறி அழ, இதுதான் சமயம் என நினைக்கும் அவரது அம்மா மகனுடன் ஹனிமூனுக்கு செல்ல முடிவு செய்கிறாள். திருமணத்துக்குப் பிறகு குடும்ப சூழல் காரணமாக லூகாஸின் அப்பா மைக்கேல் மனைவியை எங்கேயும் கூட்டிக்கொண்டு போகாத நிலையில், மகனுடன் செல்ல அவரும் ஓகே சொல்கிறார்.

OTT OTT Review Honeymoon Crasher

மொரிஷியஸில் இவர்களை வரவேற்கும் ரெசார்ட் ஓனர் இந்த காலத்தில் எல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்கிறார்கள் என வரவேற்க, அம்மாவும் மகனின் மனைவியை போலவே அங்கே இருப்பவர்கள் மத்தியில் நடிக்க ஆரம்பிக்கிறார். இவர்கள் இருவரும் அம்மா - மகன் என்பது அம்பலப்படுகிறதா? லூகாஸுக்கு இன்னொரு காதலி கிடைக்கிறாரா? கடைசியில் படம் எப்படி முடிகிறது என ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் மற்றும் காதல் தொடர்பான கருத்துக்களையும் பெண்கள் கணவர்களிடம் விரும்புவது எது என்கிற தத்துவத்தையும் வைத்து சொல்லியிருக்கும் கதை தான் இந்த ஹனிமூன் கிரேஷர்.

OTT OTT Review Honeymoon Crasher

அம்மா ஆக்டிங் அசத்தல்: கடந்த ஆண்டு தி சப்ஸ்டன்ஸ் படத்தில் டெமி மூர் 60 பிளஸ் வயதில் பேயாட்டம் ஆடியிருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 64 வயது ஃபிரெஞ்சு நடிகை மிச்சேல் லாரோக் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார். ஹீரோ லூகாஸ் கதாபாத்திரத்தில் ஜூலியன் ஃபிரெசன் ஆரம்பம் முதல் கடைசி வரை அப்பாவியான மகனாக நடித்து ரசிகர்களை அனுதாபங்களை அள்ளுகிறார். மொரிஷியஸுக்கு ஹனிமூன் செல்லும் தம்பதிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை அப்படியே இந்த படம் ரசிகர்களுக்கு அழகாக கடத்துகிறது. படத்தின் ஒளிப்பதிவு, கலர் டோன், லொக்கேஷன் என அனைத்துமே அட்டகாசம்.

OTT OTT Review Honeymoon Crasher

பார்க்கலாமா? வேண்டாமா?: போரான காதலராக இருந்தால் பெண்கள் விட்டுச் செல்வார்கள் என்பதையும் வயதானாலும் பெண்களுக்கு ஆசை இருக்கும், அதை கணவன்மார்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் காமெடியாகவே இந்த படம் கடத்திச் செல்கிறது. உள்ளாடையை கழட்டி மகனை முதுகில் சன் க்ரீம் தடவ சொல்லும் காட்சி மட்டும் கொஞ்சம் டூமச்சாக இருக்கும். ஒருசில ஆபாசக் காட்சிகள் இருந்தாலும், முழு நிர்வாணக் காட்சியாக இல்லாத நிலையில், படத்தை தாராளமாக குடும்பத்துடன் பார்க்கலாம். கிளைமேக்ஸில் சுபம் போட்டு முடித்தாலும் ஹீரோவுக்கான ஹீரோயின் கிடைத்தாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே முடிவது சற்றே வருத்தம் தான். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தாராளமாக ஒருமுறை இந்த படத்தை பார்த்து சிரிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X