ஆத்தி.. ரெட் லைட் ஏரியாவில் இரண்டு காமெடி நடிகர்கள்.. ஓடிடியில் வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

ஆம்ஸ்டர்டாம்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ரிஸ்க் பிசினஸ் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி வெப்சீரிஸ் தான் தற்போது இளைஞர்களின் ஃபேவரைட்டான ஷோவாக மாறியிருக்கிறது. கொரிய நாட்டை சேர்ந்த பிரபல காமெடி நடிகர்களான ஷின் டோங்-யுப் மற்றும் சுங் சி-க்யுங் இருவரும் தங்களின் புதிய ஷோவான ரிஸ்க் பிசினஸ் முதல் எபிசோடிலேயே நெதர்லாந்தில் லைசன்ஸ் உடன் நடக்கும் ரெட் லைட் ஏரியாவுக்குச் செல்லும் காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளனர்.

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களே மொக்கையாகத் தான் வருகிறது. அதனால், ரசிகர்கள் அதிகம் தியேட்டர்களை விடுத்து ஓடிடியில் வெளியாகும் வித்தியாசமான வெப்சீரிஸ்கள், படங்கள், டாக்குமென்ட்ரி சீரிஸ், வெளிநாடுகளில் நடக்கும் விநோதமான ரியாலிட்டி ஷோக்கள் என பலவற்றை பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

OTT: Risqué Business -The Netherlands and Germany Episode 1 shows Red Light area in Amsterdam

தியேட்டர்களை ஓரங்கட்டும் ஓடிடி: சினிமா என்பது பெரிய திரையில் பலருடன் இணைந்து விசில் அடித்துக் கொண்டு பிரம்மாண்டமாக பார்க்கக் கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால், கொரொனா லாக்டவுனுக்கு பிறகு திரையரங்குகளின் கொண்டாட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஓடிடியில் குடும்பத்துடன் வீட்டிலேயே 52 இன்ச் அதற்கும் மேல் பெரிய திரைகளை வாங்கி வசதியாக வைத்துக் கொண்டும், புரொஜெக்டர்களை வீட்டிலேயே ஓடவிட்டு புதிய படங்களை பிரைவேட்டாக பார்த்தும் வருகின்றனர். குடும்பத்துடன் பார்க்க முடியாத கன்டென்ட்டுகள் ஓடிடி தளங்களில் குவிந்து கிடக்கும் நிலையில், எங்கே சென்றாலும், ஸ்மார்ட் போன் இருக்க கவலை எதற்கு என இளைஞர்கள் அதிகம் செல்போன் உலகத்திற்குள்ளே மூழ்கிக் கிடக்க இந்த ஓடிடி வந்து தியேட்டர்களை ஓரங்கட்டி விட்டது.

முதல் எபிசோடே ரெட் லைட் ஏரியாத்தான்: ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ரெட் லைட் ஏரியாவில் ஒரு பெண் வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து துணிக்கடைகளில் ஷோ ரூமில் வைக்கப்பட்டு இருக்கும் பொம்மை போல நின்று இருக்க அந்த ஸ்க்ரீன் மூடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், ஷின் டோங்-யுப் மற்றும் சுங் சி-க்யுங் காமெடியன்கள் அந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முதல் காட்சியே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுகிறது. பாலியல் விஷயங்களை ஒருவித மூடுடன் தான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை என்றும் அது வெறும் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் அதை நகைச்சுவையாகவும் கையாளலாம் என நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியில் வெளிப்படையாக நடக்கும் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை காமெடியுடன் கலந்து கொடுக்க முயற்சித்துள்ளனர்.

பாலியல் தொழிலாளிகளுக்கு மரியாதை: ரெட் லைட் ஏரியா என்றதும் மோசமான ஏரியாவாகவும் பாலியல் தொழிலாளிகள் குழந்தைகளை எல்லாம் பெற்றுக் கொண்டு கஷ்டப்படும் இடமாக இல்லை. முழு லைசன்ஸ் உடன் பாலியல் தொழிலாளிகளுக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

குடும்பத்தோட தியேட்டர்லயே பார்க்குறாங்களே: ரெட் லைட் ஏரியாவில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் பேசிய இருவரும் அவரது அறையை சுற்றி பார்க்கின்றனர். செம க்ளீனாகவும் பல தொழில்நுட்ப சாதனங்களுடன் அந்த அறை இருக்கிறது. அங்கிருந்து கிளம்பி செல்லும் இருவரும் அடுத்து ஒரு தியேட்டருக்கு விசிட் அடிக்கின்றனர். அங்கே 18 பிளஸ் ஆட்கள் குடும்பத்துடன் வந்து அங்கே இரு பெண்கள் ஆடைகளை கழட்டி உடலுறவு செய்வது போன்று நடத்தும் காட்சிகளை காதலர்களும், கணவன் மனைவிகளும், நண்பர்களும் கூட்டாக வந்து அத்தனை பேருக்கு முன்னாடி பார்த்து குஷியாகும் காட்சிகள் எல்லாம் முதல் எபிசோடில் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 6 எபிசோடுகள் இந்த வெப்சீரிஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X