ஆடையே இல்லாமல் அலையுறாங்களே.. நெதர்லாந்து, ஜெர்மனியில் நடக்கும் கூத்துகளை விவரிக்கும் வெப் சீரிஸ்!
பெர்லின்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏகப்பட்ட 18 பிளஸ் கன்டென்ட்டுகள் கொட்டிக்கிடக்கின்றன. அதில், ஒரு சில வெப்சீரிஸ்கள் மற்றும் ஷோக்கள் உடலுறவு மற்றும் உடல் பற்றிய புரிதல்களை கொடுக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. கொரியாவை சேர்ந்த பிரபல காமெடியன்களான ஷின் டோங்-யுப் மற்றும் சுங் சி-க்யுங் இருவரும் கடந்த ஆண்டு ஜப்பானில் உள்ள பாலியல் கலாச்சாரம் குறித்து வெளியிட்ட ரிஸ்க் பிசினஸ் (Risque Business) ஷோ மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்நிலையில், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள பாலியல் கலாச்சாரம் குறித்த ஆய்வுகளை நேரடியாக நடத்தி வெளியிட்டுள்ள புதிய ஷோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் என்ன விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன. பாலியல் குறித்த பார்வையை ரசிகர்கள் மத்தியில் கடத்தி அதை பகடி செய்து காமெடியன்கள் தங்களின் ஷோவை எப்படி ஹிட் ஆக்கி உள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
செக்ஸ் கலாச்சாரம்: நம்ம ஊரில் எதெல்லாம் பாவம் என சொல்லப்படுகிறதோ உலகின் பல நாடுகளில் அது ஒரு கலாச்சாரமாகவே கொண்டாடப்படுகிறது. ஆடை அணிவதே பாவம் என்றும் இயற்கையாக மனிதர்கள் ஆடை இல்லாமல் தான் பிறக்கிறோம். அப்படி தான் வளர வேண்டும் என ஆடையே அணியாத மனிதர்கள் என ஒரு பிரிவினரே வாழ்ந்து வருகின்றனர். அவர்களை எல்லாம் சென்று போய் பார்த்து கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான ஷின் டோங்-யுப் மற்றும் சுங் சி-க்யுங் இருவரும் பண்ணும் ஃபன் தான் இந்த ஷோ முழுவதும். கடந்த பிப்ரவரி 12ம் தேதி தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த புதிய ஷோ வெளியாகி இருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை இது கவர்ந்து அதிகளவில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
ஜெர்மனியின் செந்தேன் மழையே: ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் பாலியல் பிரியர்களுக்காக தனி உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கான துணையை தேடிக் கொள்வது, பிரைவேட் பார்ட்டி, தியேட்டர்களில், ஆடையின்றி நடிகர்கள் நடிப்பது, ஆடையில்லாமல் யோகா செய்யும் இடங்கள் என ஏகப்பட்ட இடங்களுக்கு சென்று அங்கே நடக்கும் கூத்துகளை அப்படியே படம் பிடித்து அந்த இரு காமெடியன்களும் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
நோ டிரெஸ் ஏரியா: ஹோட்டல்களில் செல்லும் இருவர்களையும் ஆடைகளே அணியாமல் பெண் ரிசப்ஷனிஸ்ட்டுகள் வரவேற்பதை பார்த்து இருவரும் ஷாக் ஆவது, குதித்து குதித்து உடைகள் அணியாமல் வொர்க்கவுட் செய்வது இயல்பாக தங்கள் வேலைகளை செய்வது, மாஸ்டர்பேஷன் செய்ய தனி அறை என பல விஷயங்களை டிரெய்லரிலேயே காட்டி திணறவிட்டுள்ளனர்.
காமெடியுடன் காம நெடி: ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் கலவியை நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள பெரும்பாலானோர் எப்படி கொண்டாடுகின்றனர் என அவர்களின் இடங்களுக்கே சென்று கொரியாவின் பிரபல காமெடி நடிகர்கள் காமெடியுடன் காம நெடியையும் கலந்து கொடுத்துள்ள ஷோ தான் தற்போது இளைஞர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானாலும் நல்ல வேளையாக எடிட் மூலம் ஆடையற்றவர்களுக்கு இலை தழைகளை வைத்து மறைத்து ஷோவை வெளியிட்டுள்ளனர். அதனால், காமெடியை அனைவரும் ஆபாசமில்லாமல் ரசிக்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











