இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..அட நீங்க எதிர்பார்த்த படமும் லிஸ்டில் இருக்கு!
சென்னை : இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்னா என பார்க்கலாமா?
பிரபல யூடியூப் சேனலான 'எரும சாணி' புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியான திகில் திரைப்படம்'டி பிளாக்'. ரத்தன் யோகான் இசையமைக்க, தயாரிப்பையும் ஒளிப்பதிவையும் அரவிந்த் சிங் செய்துள்ளார். அப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாகி உள்ளது.
அதே போல, Light year திரைப்படமும் இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

கடுவா
ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் ஜூலை 7 அன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அவசா வியூஹம் (சோனிலைவ்)
சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனலுக்குச் சொந்தமான ஓடிடி தளமான SonyLIV ஆகஸ்ட் 4 ஆம் தேதி அவசா வியூஹம் என்ற மலையாளத் திரைப்படத்தை ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தை கிரிஷாந்த் இயக்கி உள்ளால், ராகுல் ராஜகோபால் நடித்துள்ள இத்திரைப்படம், குடும்ப உறவுகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும்.

டார்லிங்ஸ்
ஆலியா பட், ஷெபாலி ஷா மற்றும் விஜய் வர்மாவின் நடிப்பில் உருவாகி உள்ளத் திரைப்படம் டார்லிங்ஸ். ஆலியா பட் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 5ந் தேதி வெளியாக உள்ளது.

விக்டிம்
வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இணைந்து புதிய ஆந்தாலஜி ஒன்றை தயாரித்துள்ளது. இதில், இயக்குநர் எம்.ராஜேஷ், 'மிரேஜ்' கதையையும், 'கொட்டை பாக்கு வத்தலும்' என்ற கதையை இயக்குநர் சிம்பு தேவனும், பா.ரஞ்சித், 'தம்மம்' மற்றும் வெங்கட்பிரபு 'கன்ஃபெஷன்' ஆகிய கதைகளை இயக்கியுள்ளனர். ஆகஸ்ட் 5-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது

மஹா
ஹன்சிகாவுடன் 50 வது படமான மஹா திரைப்படம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார். மர்மம் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை யூ ஆர் ஜமீல் இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 4ந் தேதி ஆஹா தமிழில் வெளியாக உள்ளது.

கார்ட்டர்
ஜங் பியுங் கில் இயக்கிய குட் டாக்டர் ஸ்டார் ஜூ வான் நடித்துள்ள தென் கொரிய ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படம் தான் கார்ட்டர். இத்திரைப்டத்தில் ஜூ வோன் ஒரு ஞாபக மறதி ஹீரோவாக நடித்தார், அவர் வைரஸுக்கு "ஒரே மாற்று மருந்தாக" இருக்கும் ஒரு பெண்ணைப் பாதுகாத்து அவளைக் கொண்டு வருவதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்க நேரத்தை எதிர்த்துப் போராடுகிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 5 ந் தேதி அன்று உலகம் முழுவதும் நெட்ஃபிக்ஸில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications