twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓடிடி பக்கம் குவியும் ஆண்கள்.. பெண் பார்வையாளர்களை விட 2 மடங்கு அதிகரிப்பு.. ஆய்வில் வெளியான தகவல்!

    |

    சென்னை: பெண்களுடன் ஒப்பிடும்போது ஓடிடி பக்கம் திரும்பியுள்ள ஆண் பார்வையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக பல படங்கள் ஓடிடி தளத்திலேயே ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன.

    இளையராஜா எழுதி, இசையமைத்த 'மாயோன்' படப் பாடல்... குவியும் வியூஸ்... இளையராஜா எழுதி, இசையமைத்த 'மாயோன்' படப் பாடல்... குவியும் வியூஸ்...

    திரையரங்குகள் திறப்பது கேள்வி குறியானதால் சிறு பட்ஜெட் படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் என பாரபட்சம் இல்லாமல் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன.

    ஓடிடி குறித்து ஆய்வு

    ஓடிடி குறித்து ஆய்வு

    கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் டாப் நடிகர்களின் படங்கள் பல ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில் ஓடிடிக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பெட்வே இன்ஸைடர் என்ற ஆன்லைன் விளையாட்டு வலைப்பதிவு நடத்திய அந்த ஆய்வின் படி 2023 ஆம் ஆண்டுக்குள் இந்தியா OTT பார்வையாளர்களின் எண்ணிக்கை 350-லிருந்து 500 மில்லியனாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிக அளவு ஆண்கள்

    அதிக அளவு ஆண்கள்

    OTT பார்வையாளர்களின் எண்ணிக்கை இளைய தலைமுறையினரிடையே அதிகமாக இருந்தாலும், 15-30 வயதுடைய ஆண்கள் அதிக OTT கன்டென்ட்டை பயன்படுத்துகின்றனர் என்பது அந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெண்களில், 25-35 வயதிற்குட்பட்டவர்கள் OTTயை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இது கொரோனா தொற்றின் போது அதிகரித்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மடங்கு அதிகரிப்பு

    இரண்டு மடங்கு அதிகரிப்பு

    அதே சமயத்தில் ஆண் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெண்களை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த அளவில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக OTT இன் விரிவாக்கம் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் அதிகத்துள்ளது என்றும் இது கன்டென்ட் கன்செம்ப்ஷனில் 65 சதவீதத்திற்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    நிமிடங்கள் அதிகரிப்பு

    நிமிடங்கள் அதிகரிப்பு

    மேலும் OTTயின் தாக்கம் சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் நுழைந்துள்ளது, பிராண்ட் சந்தைப்படுத்துபவர்கள் டிஜிட்டல் மீடியாவில் ஈடுபாட்டைத் தூண்டுவதற்கு இன்-டிரெண்ட் OTT கன்டென்ட்டை மேம்படுத்துகிறார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்தியாவில் OTT சந்தையின் அளவு 2021 இல் 181 பில்லியனில் இருந்து 204 பில்லியன் நிமிடங்களாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 85 சதவீத இந்திய சந்தாதாரர்கள் இணையத் தயாராக இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹாட் ஸ்டாருக்கு அதிக வாடிக்கையாளர்கள்

    ஹாட் ஸ்டாருக்கு அதிக வாடிக்கையாளர்கள்

    மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதிகளவாக 43 மில்லியன் சந்தாதாரர்களுடன் உள்ளது. அதைத் தொடர்ந்து அமேசான் பிரைம் 17 மில்லியன் சந்தாதாரர்களையும், நெட்ஃபிளிக்ஸ் 5 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த பார்வையாளர்களில் 29 சதவீதத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கொண்டுள்ளது.

    டிஜிட்டல் முறையில் கல்வி

    டிஜிட்டல் முறையில் கல்வி

    ஸ்மார்ட்போன்களின் விரிவாக்கம் மற்றும் கிராமப்புறங்களில் டிஜிட்டல் பயன்பாடு, ரிலையன்ஸ் ஜியோ போன்றவற்றின் மலிவான அதிவேக இணைய சேவை ஆகியவையும் OTT விரிவாக்கத்திற்கு காரணம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. முக்கிய OTT அப்ளிகேஷன்கள் குழந்தைகளை மகிழ்விக்கவும் டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதற்கும் அனுமதித்துள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நெட்பிளிக்ஸின் மொபைல் ஒன்லி

    நெட்பிளிக்ஸின் மொபைல் ஒன்லி

    மேலும், கேபிஎம்ஜி ஈரோஸ் நவ், ஜீ டிவி மற்றும் சன் டிவி போன்ற சேனல்கள் தங்கள் சொந்த OTT தளங்களை உருவாக்கியிருப்பதும் பிராந்திய கன்டென்ட் தேவை அதிகரிப்புக்கு காரணம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் ரூ.199 மாதாந்திர மொபைல் ஒன்லி திட்டம் கிராமப்புற இந்திய பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்திற்கு சரியான உதாரணம் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

    English summary
    OTT viewership: Male audiences increased two-fold compared to females says Betway Insider, an online sports blog research. The research also says 85 per cent of Indian subscribers will be Internet-ready by the end of 2023.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X