Pushpa 2 OTT: இத்தனை கோடிக்கு புஷ்பா 2 படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கா?.. ஓடிடி ரிலீஸ் தேதி?

சென்னை: புஷ்பா படத்தை பார்த்துவிட்டு ஒரு ஷோல்டரை தூக்கிக் கொண்டு ஸ்ரீவள்ளி ராஷ்மிகா மந்தனாவையும் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தாவையும் தேடாத ரசிகர்களே இல்லை. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வெளியான புஷ்பா தி ரைஸ் படத்துக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த தேசிய விருது ஒட்டுமொத்த திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதன் காரணமாக அந்த படத்துக்கு கிடைத்த மொத்த வருமானத்தையும் பட்ஜெட்டாக போட்டு 2ம் பாகத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது. மேலும், புஷ்பா 2 படத்தை தமிழில் ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கி மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது.

pushpa 2 ott allu arjun

தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களை புஷ்பா படம் கவர்ந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரியதாக உள்ளது. நேற்று இரவே புஷ்பா 2 ப்ரீமியர் வெளியான நிலையில், பிளாக்பஸ்டர் படம் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து இங்கே காணலாம்..

300 கோடி சம்பளம்: நடிகர் அல்லு அர்ஜுன் இந்தியளவில் எந்தவொரு நடிகரும் வாங்காத அளவுக்கு புஷ்பா 2 படத்தின் மூலம் 300 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் மற்றும் ஷாருக்கான் 275 கோடி வரை சம்பளத்தை அதிகரித்த நிலையில், தனது பிராண்ட் வேல்யூவை புஷ்பா 2 படத்தின் மூலம் அதிகரித்துள்ளார் அல்லு அர்ஜுன்.

275 கோடிக்கு நெட்பிளிக்ஸில் விற்பனை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராவ் ரமேஷ், ஜகபதி பாபு, ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா நடித்த புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, பின்னணி இசையை சாம் சி.எஸ். செய்துள்ளார். மிகப்பெரிய ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 275 கோடி ரூபாய்க்கு புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

pushpa 2 ott allu arjun

ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?: அல்லு அர்ஜுனின் மாஸ் மசாலா என்டர்டெயினராக வெளியாகி இருக்கும் வைல்ட் ஃபயர் புஷ்பா தி ரூல் திரைப்படம் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும் என அக்ரீமெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்தியில் மல்டி பிளக்ஸ்களை குறிவைத்து படங்கள் வெளியானாலே இந்த கணக்குத்தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொங்கலுக்கு புஷ்பாராஜை ஓடிடியில் பார்க்க முடியாது என்றும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வியாழக்கிழமை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜதாரா ருத்ர தாண்டவத்தை ரசிகர்கள் வீட்டில் இருந்து காணலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கு முன்னதாக தியேட்டருக்குச் சென்று பெரும்பாலான அல்லு அர்ஜுன் ரசிகர்கள் புஷ்பா 2 படத்தை பார்த்துவிடுவார்கள் என்பது தனிக்கதை.

பாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்பு: முதல் நாளே புஷ்பா 2 திரைப்படம் 275 கோடி முதல் 300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தின் வசூலை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்கான அத்தனை அம்சங்களும் புஷ்பா 2வில் உள்ளதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தால் தான் பிரேக் ஈவன் வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X