சாம் கவிஞரை பார்த்து சந்தோஷமான பாண்டியராஜன்.. ஒரு வழியா அப்பாவை ஹேப்பியாக்கிய ப்ரித்வி!

சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரது நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி ராஜன், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியானது.

இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான அந்த படத்தை வீட்டில் பெரிய டிவியில் நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை தற்போது அவரது மகன் ப்ரித்விராஜ் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தையும் தனது நடிப்பை பார்த்து சந்தோஷப்பட்ட தந்தையின் ரியாக்‌ஷனையும் வெளிப்படுத்தி உள்ளார்.

Pandiarajan happy after watched his son Prithvirajan performance in Blue Star

பட்டையை கிளப்பிய பாண்டியராஜன்: இயக்குநராகவும் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் பட்டையை கிளப்பியவர் பாண்டியராஜன். ஆண் பாவம், நெத்தியடி, கோபாலா கோபாலா, கதாநாயகன், பாட்டி சொல்லை தட்டாதே, கன்னி ராசி என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். துணை நடிகராகவும் பல படங்களில் இணைந்து நடித்து அசத்தியவர் பாண்டியராஜன். ஆனால், அவரது மகன் ப்ரித்விராஜ் 2006ம் ஆண்டு வெளியான கை வந்த கலை படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தாலும் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை.

ஓடிடியில் ப்ளூ ஸ்டார்: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் கடந்த பிப்ரவரி 29ம் தேதி வெளியானது. இந்நிலையில், அந்த படத்தின் காட்சிகளை ஷேர் செய்து ஏகப்பட்ட ரசிகர்கள் சூப்பரான ஸ்போர்ட்ஸ் படம் என பாராட்டி வருகின்றனர். அதிலும், சாம் கவிஞர் கதாபாத்திரத்தில் நடித்த ப்ரித்விராஜின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சாம் கவிஞர்: டெஸ்லா அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் திவ்யா துரைசாமியை பார்த்து கவிதை சொல்லியே ப்ளூ ஸ்டார் படத்தை பார்த்த ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார் ப்ரித்விராஜ். ஹீரோ அசோக் செல்வனின் தம்பியாக நடித்த அவர் காமெடி காட்சிகளிலும் கிரிக்கெட்டில் அவர் கலந்து கொண்டு விளையாடும் காட்சிகளும், அவனை நல்லா ஆடத என சொல்ல சொல்லி வெறுப்பேத்தி சிக்ஸர்களாக பறக்கவிடும் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அப்பா ஹேப்பி: கை வந்த கலை, நாளைய பொழுது உன்னோடு, வைதேகி, வாய்மை, முப்பரிமாணம், காதல் முன்னேற்ற கழகம், கசடதபற உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் பாண்டியராஜன் இதுவரை நடித்ததிலேயே ரசிகர்களின் பாராட்டுக்களை ப்ளூ ஸ்டார் படத்தில் தான் அள்ளியிருக்கிறார். அதனை பார்த்து அவரது அப்பா பாண்டியராஜன் ரொம்பவே ஹேப்பியாகி உள்ளார். அவரது போட்டோவை ஷேர் செய்துள்ளார் ப்ரித்விராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X