மதமாற்றத்தை பேசி சர்ச்சையை கிளப்பிய.. பரமசிவன் பாத்திமா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கிய தயாரித்த திரைப்படம் பரமசிவன் பாத்திமா இதில், விமல், காளி வெங்கட்,சாயா தேவி, ரோஷினி ஹரிப்ரியன், எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த மாதம் ஜுன் மாதம் தியேட்டரில் வெளியான நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மலை கிராமத்தில் மதத்தால் பிரிவினை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கிறிஸ்துவர்கள் வாழும் கிராமத்திற்கும் இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் அடிக்கடி சண்டைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இதில், காதலர்களாக வலம் வரும் விமல் மற்றும் சாயாதேவி ஜோடி, இரு இளைஞர்களை கொலை செய்து விடுகின்றனர். அதோடு, மேலும் சில கொலைகள் செய்ய திட்டம் போடுகின்றனர். இந்த கொலை வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் வருகிறார். இதில் கொலை குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார். கடைசியில் கொலைக்கான காரணம் என்ன, அவர்களுக்கும் விமல் மற்றும் சாயா தேவிக்கு என்ன பகை என்பது தான் பரமசிவன் பார்த்திமா படத்தின் கதை.

Paramasivan Fathima Vimal OTT
Photo Credit:

உண்மை சம்பவம்: பரமசிவன் பார்த்திமா படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்ததால், படம் பெரும்பாலானவர்களை சென்று சேரவில்லை என படத்தின் இயக்குநர் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அதில், சில மதங்கள் பணம் கொடுத்து மக்களை மதம் மாற்றுகிறது, அப்படி பணத்திற்காக மதம் மாறியவர் மனதளவில் மாறவில்லை என்பதைத்தான் நான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறேன். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிடுவதற்காக நான், படாத பாடுபட்டேன். தணிக்கை குழுவிற்காக மட்டுமே மூன்று மாதம் காத்திருந்தேன். இந்த திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் இசக்கி கார்வண்ணன்: பரமசிவன் பாத்திமா படத்தில் எந்த இடத்திலும், ஆபாசமோ, கெட்ட வார்த்தையோ, வன்முறையோ இல்லை. ஆனால், அவர்கள் படத்தையே வன்முறை படமாக நினைத்து 'ஏ' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். முதலில் தணிக்கை குழுவில் 4 பேர் படத்தை பார்த்தார்கள், பின் பத்து பேர் குழு படத்தை பார்த்து விட்டு 'ஏ' சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள். தணிக்கை குழு இப்படி செய்ததால், நான் இந்த படத்தை தொலைக்காட்சிக்கு விற்க முடியவில்லை. வெளிநாட்டுக்கு விற்க முடியவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளரே நான் தான், இதனால், நான் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று மனவேதனையுடன் பேசி இருந்தார்.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில், பரமசிவன் பாத்திமா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படம், வருகிற 4 ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்தில், ஹீரோவாக நடத்திருந்த விமல் தனது கதாபாத்திரம் உணர்ந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விமலுக்கு இணையாக சரிசமமான நடிப்பை கொடுத்து மிரட்டியிருக்கிறார், சாயாதேவி. பாதிரியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Read more about: vimal விமல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X