Parasakthi OTT: எதே 2 நாளில் வாஷ் அவுட்டா?.. 8 வாரம் கழிச்சு தான் ஓடிடி.. பராசக்தி தயாரிப்பாளர் பளிச்!
சென்னை: பராசக்தி படத்தை திட்டமிட்டே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி கெடுத்து வருகின்றனர் என கிரியேட்டிவ் புரொட்யூசரான தேவ் ராம்நாத் ட்வீட் போட்டது பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், பராசக்தி திரைப்படம் 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் வெளியாகும் என இன்று நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஓபனாக கூறியுள்ளார்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி இருந்தார். துரோகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானாலும் இறுதிச்சுற்று படம் தான் சுதா கொங்கராவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அந்த படம் சக்கைப் போடு போட்டது. அதன் பின்னர், சூர்யாவை வைத்து அவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், பராசக்தி திரைப்படம் தியேட்டரில் வெளியானது தனக்கு ரொம்பவே சந்தோஷம் எனக் கூறினார் சுதா கொங்கரா.
4 வாரம் கிடையாது: பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான நிலையில், 12ம் தேதியே படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படக்குழு 2 நாட்களில் படம் 51 கோடி வசூலை உலகளவில் ஈட்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இன்று Thanksgiving Meet நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பேசிய படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசரான தேவ் ராம்நாத் பராசக்தி திரைப்படம் 4 வாரங்களில் அல்ல 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியாகும் என அறிவித்து விட்டார்.
பராசக்தி பொங்கலாக மாறுமா?: படம் வெளியாகி 2 நாட்களில் பிக்கப் ஆகாமல் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் டல் அடித்து காணப்படும் நிலையில், போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என இந்த வாரம் பொங்கல் விடுமுறையை படக்குழு ரொம்பவே எதிர்நோக்கி காத்திருக்கிறது. பராசக்தி படத்துக்குப் போட்டியாக தெறி ரீ ரிலீஸ், வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் மற்றும் திரெளபதி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், பராசக்தி பொங்கலாக இந்த வாரம் மாறுமா என்பதை வெயிட் பண்ணிதான் பார்க்க வேண்டும்.
நல்ல முடிவு: 4 வாரத்தில் புதிய படம் ஓடிடியில் வெளியானால், மக்கள் வெயிட் பண்ணி அங்கேயே பார்த்து விடும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பராசக்தி திரைப்படம் 8 வாரம் கழித்து வெளியானால் கண்டிப்பாக ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்க்க வாய்ப்புகள் அதிகம். கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படமும் முதலில் 8 வாரம் கழித்து வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், படம் ஃப்ளாப் ஆன நிலையில், 4 வாரங்களிலேயே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











