அந்த 6 கோடியை என்ன பண்ணீங்க?.. பரிதாபங்கள்’ கோபி, சுதாகர் சொன்ன பதிலை கேட்டீங்களா?
சென்னை: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் கோபி மற்றும் சுதாகர் புதிதாக கோடியில் இருவர் எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். தங்களது பரிதாபங்கள் யூடியூப் சேனலிலேயே அந்த வெப் சீரிஸை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அதை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பிரீமியர் ஷோ நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கோபி மற்றும் சுதாகர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
முதன்முறையாக கோபி மற்றும் சுதாகர் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து கிரவுட் ஃபண்டிங் மூலமாக 6 கோடி ரூபாய் வரை பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் வசூல் செய்த பணத்தை வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் இன்றுவரை வெளியாகவில்லையே? அந்தப் படம் என்ன ஆனது? மக்கள் பணம் என்ன ஆனது? என்கிற கேள்வி கோபி மற்றும் சுதாகரிடம் எழுப்பப்பட்டது.

மணி கம் டுடே கோ டுமாரோ: யூடியூப் சேனல்கள் மூலம் பல இளைஞர்கள் தங்கள் திறமையை காட்டி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று பிரபலங்கள் ஆகி வருகின்றனர். பிளாக் ஷீப், பரிதாபங்கள், ஜம்ப் கட்ஸ், புட் சட்னி உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் பிரபலமான நிலையில், அதன் மூலம் பிரபலமான இளைஞர்கள் சினிமாவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். பிளாக் ஷீப் மூலமாக எடுக்கப்பட்ட பா பா பிளாக் ஷீப் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. கோபி, சுதாகர் நடிப்பில் தொடங்கப்பட்ட கிரவுட் ஃபண்டிங் திரைப்படம் என்ன ஆனது என்று தெரியாமல் கிடப்பில் கிடக்கிறது.
அடுத்த படமும் ரிலீஸ் ஆகவில்லை: கோபி மற்றும் சுதாகர் நடிப்பில் இரண்டாவதாக தொடங்கப்பட்ட திரைப்படம் படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்தப் படமும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், அதற்குள் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ள கோபி, சுதாகர் கோடியில் இருவர் வெப்சீரிஸை தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட முடிவு செய்து அதற்காக பிரத்யேகமாக பிரஸ் ஷோ எல்லாம் போட்டுக் காட்டியுள்ளனர்.
6 கோடி என்ன ஆச்சு?: அப்போது பத்திரிகையாளர் ஒருவர் மக்கள் பணம் 6 கோடி ரூபாய் என்ன ஆச்சு? என்கிற கேள்வியை எழுப்ப இன்னொரு நாள் அதற்கான பதிலை அளிக்கிறோம். இப்போது இந்த படத்தை முடித்து விட்டு அதற்கான விளக்கத்தை நிச்சயம் அளிப்போம் என கோபி மற்றும் சுதாகர் இருவரும் வெளிப்படையாக விளக்கம் அளிக்காமல் சென்று விட்டனர்.


Click it and Unblock the Notifications











