OTT: புது அவதாரம் எடுத்த ‘பரிதாபங்கள்’ கோபி, சுதாகர்.. ”ஆக்கு பாக்கு” சும்மா அள்ளுதே!
சென்னை: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். ஆரம்பத்தில் மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யூடியூப் சேனலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இருவரும், அதன் பின் தனியாக பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலை தொடங்கி தொடர்ந்து காமெடி வீடியோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளனர். ஏற்கனவே சில வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர்கள் புதிதாக கோடியில் இருவர் எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.
கவுண்டமணி - செந்தில் காம்போவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த கூட்டணி என்றால் கோபி சுதாகர் கூட்டணி தான் என்று தாராளமாக கூறலாம். இவர்களுடன் யூடியூப் சேனல் ஆரம்பித்த பலர், சினிமாவுக்கு வருகிறேன் என்கிற பெயரில் காணாமல் போய்விட்டனர். ஆனால் இன்னும் தொடர்ந்து இவர்கள் இருவரும் காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றனர்.

யூடியூப் முதல் சினிமா வரை: மீசைய முறுக்கு, மெர்சல், ஜாம்பி, போடவும் முடியாது ஒளியவும் முடியாது என பல படங்களில் இவர்களும் நடித்துள்ளனர். ஹீரோவாக இவர்கள் மணி கம் டுடே கோ டுமாரோ வெறும் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து ஏகப்பட்ட சப்ஸ்கிரைபர்களிடம் சுமார் 6 கோடிக்கு மேல் படம் வசூலித்து படத்தை ஆரம்பித்தனர். ஆனால் அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. அதற்கு நடுவே அடுத்த படத்திற்கான பூஜை போட்ட இருவரும் இந்தப் படத்தை முடித்துவிட்டு முதல் படத்தை எடுப்போம் எனக் கூறியிருந்தனர்.
கோடியில் இருவர்: Codeyil iruvar என ஆங்கில டைட்டிலில் கோட் பெரும் வார்த்தை வரும்படி டைட்டில் வைத்திருப்பதால், ஐடியில் வேலை பார்ப்பவர்களின் கதையாக இந்த வெப்சீரிஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது படத்தை முடித்து விட்டோம் என அறிவித்த நிலையில், அந்த படம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் அடுத்ததாக நடிக்க உள்ள வெப் சீரிஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.
பாடகர்களாக அவதாரம்: சினிமாவில் நடிக்க ஆரம்பித்த கோபி மற்றும் சுதாகர் தற்போது கோடியில் இருவர் வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ள” ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு” எனும் பாடலை இணைந்து பாடியுள்ளனர். அதன் வீடியோவை தற்போது தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.
காமெடியாக இருக்கும்: சீரியஸான கதைக்குள் செல்லாமல் தொடர்ந்து காமெடியான வெப் சீரிஸ்களை செய்து வரும் கோபி மற்றும் சுதாகர் நிச்சயம் ரசிகர்களை இந்த கோடியில் இருவர் வெப் சீரிஸ் மூலமாக சிரிக்க வைப்பார்கள் நேரத்தில் பார்க்கப்படுகிறது. வழக்கம் போல இந்த வெப்சீரிஸும் பரிதாபங்கள் யூடியூப் சேனலிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாஹித் ஆனந்த் என்பவர் இந்த வெப்சீரிஸை இயக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











