என்னென்ன சொல்றான் பாருங்க.. அரசியல் பரிதாபங்கள் இதனால் தான் செய்யவில்லை.. ஓபனா பேசிய கோபி, சுதாகர்!

சென்னை: வைகோ, சீமான், தமிழிசை செளந்தர்ராஜன் போன்ற பல அரசியல் தலைவர்களை ட்ரோல் செய்து பரிதாபங்கள் வீடியோ வெளியிட்டு டிரெண்டானவர்கள் கோபி மற்றும் சுதாகர். கோடியில் இருவர் வெப்சீரிஸில் நடித்துள்ள அவர்கள் தங்கள் யூடியூப் சேனலில் வாரம் ஒரு எபிசோடை வெளியிட திட்டமிட்டு சமீபத்தில் முதல் எபிசோடையும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் வெப்சீரிஸை புரமோட் செய்யும் விதமாக பல யூடியூப் சேனல்களுக்கும் மீடியாக்களுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர். ஆரம்பத்தில் பேங்க் பரிதாபங்கள், பஸ் ஸ்டாண்ட் பரிதாபங்கள் என பல விஷயங்களை பகடி செய்து வீடியோக்களாக வெளியிட்டு வந்தவர்கள் சமீபத்தில் ஹஸ்பண்ட் பரிதாபங்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு வேறலெவலில் ரீச் அடைந்தனர்.

Parithabangal Gopi and Sudhakar reveals why they avoid Political sattire nowadays


வடக்கன் என்றே சொல்லவில்லை: வடக்கு ரயில் பரிதாபங்கள் என்கிற வீடியோ மிகப்பெரிய அளவில் அதிக பார்வையாளர்களை ஈட்டியது. மேலும், வடக்கர்களை கலாய்க்கிறீங்க என சிக்கலும் ஏற்பட்டன. ஆனால், அந்த ஷோவில் வடக்கு ரயில் பரிதாபங்கள் என்று தான் போட்டிருப்போமே தவிர எங்கேயும் வடக்கன் என்கிற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை என சுதாகர் சூப்பராக எடுத்துக் கொடுத்து பேசி அசத்தியுள்ளார்.

அரசியல் பரிதாபங்கள் ஏன் பண்ணல?: சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளையும் மழை வெள்ளம் போன்ற டிரெண்டாகும் விஷயங்களையும் வைத்து வீடியோக்களை போட்டு வரும் கோபி, சுதாகர் சமீப காலமாக அரசியல் பரிதாபங்கள் ஏன் செய்யவில்லை என்கிற கேள்விக்கு ஆரம்பத்தில் அந்த நேரத்துக்கு ஏற்றவாறு கிடைத்த கன்டென்ட்டில் கலாய்த்தோம். ஆனால், அதையே இப்போது வரை எடுத்து வந்து எடிட் செய்து மீமாக மாற்றி தேர்தல் பிரச்சாரத்துக்கெல்லாம் செய்து வருகின்றனர். தலைவர்கள் நல்ல கருத்துக்களை பேசி முடிக்கும் போது, எங்க வீடியோவை எடுத்து வந்து என்னென்ன சொல்றான் பாருங்க என போட்டு அவர்கள் மைலேஜ் ஏற்றிக் கொள்ள எங்களை கோர்த்து விடுகின்றனர். அதனால் தான் சமீப காலமாக அரசியல் பரிதாபங்கள் பக்கம் போகாமல் ஒதுங்கியிருக்கிறோம் என்றனர்.

சினிமாவில் செட்டாகல: தனியாக படங்களில் நாங்கள் இருவரும் நடித்து வருகிறோம். மற்ற நடிகர்கள் படங்களுக்கு சென்றால், ஒரே ஒரு சீனுக்கு வந்து ப்ளூ சட்டை மாறன் மாதிரி பேசிட்டுப் போப்பா என்கின்றனர். அதனால் தான் மற்ற ஹீரோக்களின் படங்களில் பெரிதாக காமெடி செய்வதில்லை என அந்த கேள்விக்கும் கோடியில் இருவர்கள் பதிலளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X