OTT: பக்காவா வெளியான பார்க்கிங்.. ஓடிடியில் செம வரவேற்பு.. எம்.எஸ். பாஸ்கர் நடிப்பு வேறலெவல்!

சென்னை: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் இந்த மாதம் 1ம் தேதி வெளியானது. இந்நிலையில், சரியாக 30 நாட்களில் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்த வாரம் தியேட்டரில் பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், பார்க்கிங் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், ஓடிடியில் ரசிகர்கள் அந்த படத்தை காலை முதலே கண்டு ரசித்து வருகின்றனர்.

Parking out on Disney Plus Hotstar OTT platform today

எல்ஜிஎம் தோல்வி: இந்த ஆண்டு தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடித்த எல்ஜிஎம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஜூலை மாதம் 28ம் தேதி எல்ஜிஎம் திரைப்படம் வெளியானது. லவ் டுடே படம் போல எல்ஜிஎம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் தோனி எந்த படத்தையும் தயாரிக்க முன்வரவில்லை.

பிக் பாஸ் பிரபலம்: சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் பொறியாளன், வில் அம்பு என பல படங்களில் நடித்தாலும் அவருக்கு எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1ல் போட்டியாளராக ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கத் தொடங்கிய ஹரிஷ் கல்யாணுக்கு அதன் பின்னர் தொடர்ந்து பல படங்கள் வரிசையாக கிடைத்தன. தாராள பிரபு படத்திற்கு பிறகு மீண்டும் படங்கள் சொதப்ப ஆரம்பித்த நிலையில், இந்த மாதம் வெளியான பார்க்கிங் படம் நல்ல படம் என பாராட்டுக்களை பெற்றது.

வசூல் பாதிப்பு: ஆனால், மிக்ஜாம் புயல் வந்த வாரத்தில் நயன்தாராவின் அன்னபூரணி மற்றும் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் உள்ளிட்ட படங்கள் வெளியான நிலையில், தியேட்டரில் வசூல் பெரிதும் பாதித்தது. இந்நிலையில், நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் நடித்த அன்னபூரணி வெளியானது. ஆனால், விஜயகாந்தின் மறைவு காரணமாக தமிழ்நாட்டில் பலரும் அந்த படத்தை பார்க்கவில்லை. இன்று வெளியான பார்க்கிங் படத்துக்கு நல்ல வரவேற்பு காலையில் இருந்தே கிடைத்து வருகிறது.

எந்த ஓடிடி?: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அன்னபூரணி வெளியான நிலையில், ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்தில் ஈகோ பிரச்சனை எந்த அளவுக்கு மேல் வீட்டில் இருப்பவரையும் கீழ் வீட்டில் இருப்பவரையும் சண்டை போட வைக்கிறது என்பதை விறுவிறுப்பாக திரில்லர் படம் போல இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

எம்.எஸ். பாஸ்கர் எக்ஸ்ட்ராடினரி: இந்த படத்தில் வில்லன் என யாருமே இல்லை. ஹரிஷ் கல்யாண், இந்துஜா மேல் வீட்டுக்கு குடிவர கீழ் வீட்டில் இருக்கும் ஒரே பார்க்கிங் இடத்துக்கு இடையே எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையே நடக்கும் ஈகோ மோதல் தான் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளது. கடைசியில் ஈகோவால் எந்தளவுக்கு பாத்ப்புகள் ஏற்படும் அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு போனால் வாழ்வில் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்பதை இயக்குநர் உணர்த்தியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X