பொன்னியின் செல்வனால் மோசம் போன பார்த்திபன்… இழுத்தடிக்கப்படும் இரவின் நிழல் ஓடிடி ரிலீஸ்

சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல் படம் இந்த வாரம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

ஆனால், எதிர்பார்த்தபடி இரவின் நிழல் அமேசானில் வெளியாகமல் போனதற்கு பார்த்திபன் கூறியுள்ள விளக்கம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்திபனின் இரவின் நிழல்

பார்த்திபனின் இரவின் நிழல்

தனது படங்களில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் பார்த்திபன், இரவின் நிழல் படத்தை இயக்கியிருந்தார். இந்த்திரைப்படம் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமைக்குச் சொந்தமான. இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பார்த்திபனுடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரிஜிதா சாகா, ரோபோ சங்கர், ரேகா நாயர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

ஓடிடியில் இன்னும் வெளியாகவில்லை

ஓடிடியில் இன்னும் வெளியாகவில்லை

'இரவின் நிழல்' பார்த்திபனின் புதிய முயற்சிக்காக பாராட்டைப் பெற்றாலும், கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால், இரவின் நிழல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர், மூன்று மாதங்களுக்கும் மேலாக ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாக நிலையில், இதுகுறித்து மூன்று தினங்களுக்கு முன்னர் ட்வீட் செய்திருந்தார் பார்த்திபன், அதில் அமேசானில் அக்டோபர் 1 அல்லது 2ம் தேதியில் இரவின் நிழல் வெளியாகும் என உறுதியாக தெரிவித்திருந்தார். சொன்னபடி வெளியாகத நிலையில், டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக விரைவில் இன்னும் வெளியாகவில்லை என மறுநாளே பார்த்திபன் ட்வீட் செய்திருந்தார்.

பொன்னியின் செல்வன் தான் காரணம்

பொன்னியின் செல்வன் தான் காரணம்

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தால் தான் இரவின் நிழல் இந்த வாரம் அமேசானில் வெளியாகவில்லை என பார்த்திபன் கூறியுள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன், திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியதோடு, இன்று முதல் அமேசான் ஓடிடியிலும் வெளியானது. பொன்னியின் செல்வனுக்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதால், இரவின் நிழல் ரிலீஸை அமேசான் நிறுவனம் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பார்த்திபன் டிவீட்

பார்த்திபன் டிவீட்

இதுகுறித்து பார்த்திபன் அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தி வைரலாகியுள்ளது. அதில், "அமேசானில் இன்று முதல் பொன்னியின் செல்வன்'எனவே, வரும் வாரம் வருமாம் இரவின் நிழல்'எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதே பதிவில் "பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம். இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை." என தெரிவித்துள்ள்லார். பார்த்திபனின் இந்த டிவீட்டர் பதிவு, சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓடிடியில் கூட சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை கூறும் விதமாக அமைந்துள்ளது. தியேட்டர்களில் தான் பெரிய பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை என்றால், இப்போது ஓடிடியிலும் அதே நிலை நீடிப்பதாக நெட்டிசன்களும் விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X