பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.. எங்கே? எந்த தளத்தில் காணலாம்?

சென்னை: Sun NXT ஓடிடி தளம் தனது பிரத்தியேக பிரீமியர் வரிசையில் 'உன் பார்வையில்' திரில்லர் திரைப்படத்தை சேர்த்துள்ளது. நடிகை பார்வதி நாயர் நடித்துள்ள இந்த த்ரில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் 19ம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் Sun NXT-இல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமான உணர்ச்சிகரமான பாத்திரத்தில் பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர், இரட்டை சகோதரியின் மர்ம மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடி அவரது தேடல், ரகசியங்களும் திருப்பங்களும் நிறைந்த ஒரு திகில் உலகிற்குள் ரசிகர்களை இழுத்துச் செல்கிறது.

Parvathy Nair s Un Paarvaiyil movie ready for a direct OTT release on Sun Nxt
Photo Credit:

பார்வதி நாயரின் வலுவான நடிப்பு இந்தப் படத்தின் பெரிய பலமாகும். மர்ம மரணங்களின் விசாரணையில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் மகேந்திரன் பங்களிக்கிறார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கள் ரவியின் ஈர்க்கும் நடிப்பு 'உன் பார்வையில்' படத்தின் விறுவிறுப்பை மேலும் கூட்டுகிறது.

"பார்வையற்ற பெண்ணாக நடிப்பது ஒரு சவாலான அதே சமயம் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் 'உன் பார்வையில்' திரைப்படத்தை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று நடிகை பார்வதி நாயர் தெரிவித்தார்.

Sun NXT-இன் மற்றொரு பிரத்தியேக இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லரான 'தீயவர் குலை நடுங்க' படத்தையும் கண்டுகளியுங்கள். ஆக்சன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம் நடித்துள்ள இந்தப் படம், முக்கியமான சமூகப் பிரச்சனையை மையப்படுத்தி, திரில்லர் ரசிகர்களுக்குச் சிறந்த விருதாகும்.

7+ மொழிகளில் 4000-க்கும் மேற்பட்ட தலைப்புகள், 44 நேரலை சேனல்களுடன், Sun NXT அனைத்து வயது, பிராந்திய பார்வையாளர்களையும் ஈர்க்கும் முன்னணி OTT தளமாகத் திகழ்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X