Netflix - ஓடிடி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.. நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்ட் ஷேரிங் நிறுத்தப்பட்டது

சென்னை: Netflix (நெட்ஃப்ளிக்ஸ்) ஒரு பயனர் மற்றொருவருக்கு பாஸ்வேர்ட் பகிர்வது நிறுத்தப்படுவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலாம் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது.

Password sharing is stopped in india Netflix Official Announcement

ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்கள்: ஓடிடியை பொறுத்தவரை தமிழில் முழு முதலாக இறங்கியது நடிகர் சூர்யாதான். அவர் நடித்த சூரரைப் போற்று படமும், ஜெய் பீம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதனையடுத்து பலரும் படங்களை ஓடிடி நிறுவனங்களிடம் நேரடியாக கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. அதனையடுத்து வெப் சீரிஸ்கள் மீது ரசிகர்களுக்கு மோகம் அதிகரிக்க ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அப்படி வெளியாகும் வெப் சீரிஸ்கள் ஹிட்டாகவும் செய்கின்றன. வெற்றிமாறனேக்கூட வடசென்னை 2வை வெப் சீரிஸாக இயக்கவிருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

ஓடிடிக்கு தாவும் பிரபலங்கள்: சமீபத்தில் வெற்றிமாறன் பேட்டைக்காளி என்ற வெப் சீரிஸை தயாரித்திருந்தார். இதனையடுத்து பிரபல இயக்குநர்களும், நடிகர்களும் ஓடிடி வெப் சீரிஸ் மீது தங்களது கவனத்தை திருப்பியிருக்கின்றனர். மூன்று மணி நேரத்தில் சொல்ல முடியாததை 8 எபிசோடுகளாக வெப் சீரிஸில் சொல்லலாம் என்பதால் படைப்பாளிகள் மத்தியில் வெப் சீரிஸுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

டிக்கெட் ரேட்டும் ஓவர்: அதேபோல் திரையரங்குகளுக்கு ஒரு படம் பார்க்க குடும்பத்துடன் சென்றால் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது தேவைப்படுகிறது. மாறாக அந்த பணத்தை ஓடிடி சந்தாவுக்கு செலவழித்தால் ஒரு வருடம் வீட்டில் இருந்தபடியே பார்த்துவிடலாம் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்திருப்பதால் பலரும் ஓடிடி சப்ஸ்க்ரிப்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகின்றனர்.

நெட்ஃப்ளிக்ஸ்: அப்படி இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இவற்றில் நெட்ஃப்ளிக்ஸில் உலகின் பல்வேறு நாடுகளில் உருவாகும் வெப் சீரிஸ்கள் முதல் படங்கள்வரை ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் அந்த தளத்துக்கு பயனர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.

அதிருப்தி: அதேசமயம் மற்ற ஓடிடி தளங்களைவிடவும் நெட்ஃப்ளிக்ஸின் சந்தா கொஞ்சம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். உதாரணமாக நெட்ஃப்ளிக்ஸின் ஒரு மாத சந்தாவுக்கு 149 ரூபாய் (மொபைல் ப்ளான்) வசூலித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வருடத்துக்கு 1,788 ரூபாய் வசூலிக்கிறது. மேலும் பேஸிக் ப்ளானாக ஒருவர் மட்டும் பார்ப்பதற்கு ஒரு மாதத்துக்கு 199 ரூபாயும், வருடத்துக்கு 2,388 ரூபாயும் வசூலிக்கிறது.

அதேபோல் ஸ்டாண்டர்ன் ப்ளானாக ( F HD Content) இரண்டு பேர் பார்க்க ஒரு மாதத்துக்கு 499 ரூபாயும், 5,988 ரூபாயும், ப்ரீமியம் ப்ளானாக (அல்ட்ரா ஹெச்.சி) நான்கு பேர் பார்ப்பதற்கும் மாதம் 649 ரூபாயும், வருடத்துக்கு 7,788 ரூபாயும் வசூலித்துக்கொண்டிருக்கிறது. இதனால் இவ்வளவு பணம் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸை சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுமா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதன் காரணமாக ஒருவர் மட்டும் சப்ஸ்க்ரைப் செய்து பாஸ்வேர்டை மற்றொருவருக்கு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

தடுத்தது நெட்ஃப்ளிக்ஸ்: சப்ஸ்க்ரைபர்கள் தொடர்ந்து இப்படி செய்வதால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு வருமானம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதனை தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தடுத்திருக்கிறது. அதன்படி, ஒரு பயனர் மற்றொருவருக்கு பாஸ்வேர்ட் ஷேர் செய்யப்படுவது நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "பாஸ்வேர்டை ஷேர் செய்திருக்கும் பயனர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேபோல் பேஸிக் ப்ளானில் Ad Free அம்சம் புதிய பயனர்களுக்கும், ஏற்கனவே அந்த ப்ளானில் இருந்து விலகி மீண்டும் இணைய விரும்பும் பயனர்களுக்கும் நிறுத்தப்படுகிறது. தற்போது இருக்கும் சப்ஸ்க்ரைப்பர்களுக்கு மட்டும்தான் அது பொருந்தும். கனடாவில் அந்த முறை செயல்படுத்தவும்பட்டுவிட்டது. அதனையடுத்து அமெரிக்காவிலும் ப்ரிட்டனிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம்.

இந்த வருடத்தின் வருவாய் புதிய பயனர்களின் மூலம்தான் அதிகரித்திருக்கிறது. இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில் இயக்க லாபம் மட்டும் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதை இந்த வருடத்தின் முழுமைக்கும் அதிகரிக்கவும் திட்டம் தீட்டியிருக்கிறோம்" என கூறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X