சர்ச்சையை கிளப்பிய சாவா முதல் ரகளை செய்த பெருசு வரை.. ஓடிடியில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் தெரியுமா?

சென்னை: திரையரங்கில் வெளியாகி ஹிட் ஆன படங்கள் 4 வாரத்திற்கு பிறகு ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவது வழக்கமாக இருக்கிறது. திரயரங்கிற்கு வந்த படங்களை மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் காண ஆவலோடு ஒரு சில ரசிகர்கள் காத்திருப்பது உண்டு. திரையரங்கில் வெளியாகும் படங்களை போன்றே ஓடிடி தளத்திலும் புதுப்புது படங்கள் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த லிஸ்டை இதில் காணலாம்.

பெருசு: இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வெளியான பெருசு படத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில், சாந்தனி தமிழரசன் ஆகியோர் நடிததிருந்தனர். இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடல்ட் காமெடி வகை படமாக இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பத்தில் இருக்கும் பெரிசு ஒருவர் இறந்து விட அவரால் ஏற்படும் பிரச்னையை அந்த குடும்பம் எப்படி சமாளிக்கிறது என்பது தான் கதை. படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களால் கலகலப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை பார்க்காதவர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

perusu-kingston-sava-to-be-released-on-ott-this-week

கிங்ஸ்டன்: ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் உருவான கிங்ஸ்டன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவான இப்படம் ஃபேண்டஸி ஹாரர் படமாக உருவானது. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சோரி 2: இயக்குநர் விஷால் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான சோரி திரைப்படத்தில் கர்ப்பிணி பெண் தனக்கு பிறக்க போகும் குழந்தையை பாதுகாப்பது தான் கதையாக அமைக்கப்பட்டது. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக வெளியான சோரி 2 திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. முதல் பாகத்தை போன்றே சோரி 2 படத்தில் தனது 7 வயது மகனை பாதுகாப்பது போன்று இருந்தது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

perusu-kingston-sava-to-be-released-on-ott-this-week

சாவா: லஷ்மன் உத்தேகர் இயக்கத்தில் வெளியான சாவா திரைப்படம் உலகளவில் ரூ.800 கோடி வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. விக்கி கெளஷல் கரியரில் இப்படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமாக இருக்கிறது. மிகப்பெரிய வசூலையும் ஈட்டிய படமும் இதுதான். இந்தியாவின் கிரஷ் என்று கூறப்பட்ட ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மகராஷ்டிரா மாநிலத்தில் அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முகலாய மன்னர்கள் காலத்தில் ஏற்பட்ட பேரழிவுகளையும் காட்டப்பட்டதால் சர்ச்சைகளையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

perusu-kingston-sava-to-be-released-on-ott-this-week

பிளாக் மிரர் சீசன் 7: சார்லி ப்ரூக்கர் இயக்கிய பிளாக் மிரர் சீசன் 7 பாகத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று ஸ்ட்ரீம் ஆகிறது. எதிர்காலத்தை dystopian என்ற வகையை சேர்ந்த மனிதர்களால் ஏற்படும் குழப்பங்களை மையப்படுத்தி சார்லி ப்ரூக்கர் இயக்கியிருப்பார். தொழில்நுட்பங்களால் மனித வாழ்வில் ஏற்படும் மாற்றம் இது இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என இரண்டு உலகத்தையும் பிளாக் மிரர் சீசன் 7 வெப் தொடரில் காட்சிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X