காலை வாரிய கங்குவா.. ஓடிடிக்கு படையெடுக்கும் ரசிகர்கள்.. ஓடிடியில் வெளியான படங்களின் லிஸ்ட்!

சென்னை: நேற்று சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஓடிடி தளங்களிலும் இன்று பலத்திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.தியேட்டரில் படத்தை பார்க்க தவறவிட்டவர்கள் ஓடிடியில் இந்த படத்தை பார்த்து மகிழாலாம்.

பேட்ட ராப்: எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் நவம்பர் 15ந் தேதியான இன்று அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

ott

சார்: கடந்த மாதம் தியேட்டரில் வெளியான திரைப்படம் தான் சார், வாகை சூடவா திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய விமல் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், பருத்தி வீரன் சரவணன் முக்கிய ரோலில் நடித்தார். போஸ்ட் வெங்கட் எழுதி இயக்கிய இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.கல்வியின் முக்கியத்துவத்தை பேசிய இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதன்படி சார் திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

ரேவு தெலுங்கு: இயக்குனர் ஹரிநாத் புலி இயக்கிய திரைப்படம் தான் ரேவு.கிராமத்து கதை அம்சத்தை கொண்ட இத்திரைபடம் ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் வெளியானது. ரேவுவில் வம்சி ராம் பெண்டியால், அஜய், சுவாதி பீமிரெட்டி மற்றும் எபுரி ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சம்ஹித் என்டர்டெயின்மென்ட் மற்றும் பாருபள்ளி புரொடக்ஷன் பேனர்களின் கீழ் டாக்டர் முரளி கிஞ்சுபள்ளி மற்றும் நவீன் பருப்பள்ளி இப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் இன்று பார்க்கலாம்.

ott

அடித்தட்டு மலையாளம்: சன்னி வெய்ன் மற்றும் ஷைன் டாம் சாக்கோ நடித்த 'அடித்தட்டு' மலையாள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ மற்றும் மனோரமா மேக்ஸ் ஆகிய ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 2022 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகும். முன்னாள் கேப்டன் கடலில் மர்மமான முறையில் கொல்லப்பட அந்த கப்பலில் இருக்கும் ஏழு மீனவர்களும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.கடைசியிர் கொலைகாரன் யார் என்பதுதான் படத்தின் கதை.

நயன்தாரா திருமண வீடியோ: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் 2022-ம் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருந்ததால், இவர்களின் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் இணையத்தில் எதுவும் வெளியாகவில்லை. இந்த திருமண வீடியோ வெளியாவதில் சில குழப்பங்கள் இருந்ததால் திருமண வீடியோ வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஒருவழியாக வெளியாக உள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 18-ந் தேதி அதாவது நயன்தாராவின் பிறந்த நாள் அன்று இந்த டாக்குமெண்ட்ரி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

ott

மா நன்னா சூப்பர் ஹீரோ: இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்கத்தில் அப்பா மகனின் உறவை கொண்டாடும் படம்தான் மா நன்னா சூப்பர் ஹீரோ.இப்படத்தில் சுதீர் பாபு, சாயாஜி ஷிண்டே, சாய் சந்த் மற்றும் ஆர்னா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 15 ந் தேதியான இன்று ZEE5 தளத்தில் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X