For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஓடிடியில இந்த 7 வெப்சீரிஸ் பக்கம் மட்டும் போயிடாதீங்க.. அவ்ளோ அடல்ட் சீன்.. அப்புறம் தூங்க மாட்டீங்க

  |

  சென்னை: முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான செம ஹாட் வெப்சீரிஸ் பட்டியலில் இந்த 7 வெப்சீரிஸ்கள் இடம்பெற்றுள்ளன.

  ஓடிடிக்கு சென்சார் இல்லை என்பதால் இந்திய நடிகர்களும் அத்துமீறி அரைநிர்வாண காட்சிகளில் அசால்ட்டாக நடித்து வருகின்றனர்.

  அடல்ட் சீன்கள் மட்டுமின்றி திரைக்கதையே விறுவிறுப்பாக நகர்வதால் இந்த 7 வெப்சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தால் அடுத்தடுத்த எபிசோடுகள் சீசன்கள் என தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து அதற்கு அடிக்ட்டே ஆகிவிடுவீர்கள்..

  காந்தாரா பட இயக்குநரின் கனவை நனவாக்கிய ரஜினிகாந்த்.. நெகிழ்ந்த ரிஷப் ஷெட்டி! காந்தாரா பட இயக்குநரின் கனவை நனவாக்கிய ரஜினிகாந்த்.. நெகிழ்ந்த ரிஷப் ஷெட்டி!

  ஷீ வெப்சீரிஸ்

  ஷீ வெப்சீரிஸ்

  இமிதியாஸ் அலி இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ள செம ஹாட்டான அடல்ட் வெப்சீரிஸ் தான் She. போலீஸ் கான்ஸ்டபிள் பெண் எப்படி பிராஸ்டிட்ட்யூட்டாக அண்டர்கவர் ஆப்ரேஷன் செய்து நாயக் எனும் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிக்கிறாள் என்பது தான் இந்த வெப்சீரிஸின் கதை. அடல்ட் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமலும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இந்த வெப்சீரிஸ் அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்க நிச்சயம் தூண்டும்.

  ஏ காலி காலி அன்கெயின்

  ஏ காலி காலி அன்கெயின்

  Yeh Kaali Kaali Ankhein ஹீரோவை ஒரு பெண் துரத்தி துரத்தி காதலிப்பதும் உல்லாசமாக இருப்பதுமாக செல்ல, ஒரு கட்டத்தில் அவளிடம் இருந்து தப்பிக்க ஒரு காண்ட்ராக்ட் கில்லரையே அவன் நியமித்து அந்த பெண்ணை போட்டுத் தள்ளினானா? அவளுக்கு என்ன நேர்ந்தது என்கிற கதையும் அடல்ட் கன்டென்ட்டுகளை எக்கச்சக்கமாக தூவி உருவாக்கி உள்ளனர். தாஹிர் ராஜ் பசீன் மற்றும் ஆஞ்சல் சிங்கிற்கு இந்த வெப்சீரிஸ் மிகப்பெரிய பிரபலத்தை பாலிவுட்டில் தேடித் தந்துள்ளது.

  செக்ஸ் எஜுகேஷன்

  செக்ஸ் எஜுகேஷன்

  ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ள நெட்பிளிக்ஸின் படு ஹாட்டான இந்த Sex Education வெப்சீரிஸுக்கு உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தி உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் இந்த வெப்சீரிஸ் டப் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் எபிசோடுகளை தாண்டி அடுத்தடுத்த சீசன்களுக்காகவே ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  யூ வெப்சீரிஸ்

  யூ வெப்சீரிஸ்

  அந்த மாதிரி காட்சிகளுக்கு மட்டுமில்லாமல் நகத்தை கடித்துக் கொண்டு சீட் எட்ஜில் பார்க்கும் படியான த்ரில்லிங்கான காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லாமல் அடல்ட் த்ரில்லர் வெப்சீரிஸாக உருவாகி உள்ள You வெப்சீரிஸ் இதுவரை 2 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. அடுத்த சீசன் 2023ல் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதன் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

  சேக்ரட் கேம்ஸ்

  சேக்ரட் கேம்ஸ்

  இந்தியாவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பிரபலமாக காரணமே இந்த வெப்சீரிஸ் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சைஃப் அலி கான், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான Sacred Games கதையாகவும் ஆபாச காட்சிகளுக்காகவும் ரொம்பவே ஃபேமஸான ஒரு வெப்சீரிஸ். இந்தியிலும் ஹாலிவுட்டுக்கு நிகரான படு போல்டான வெப்சீரிஸ்களை எடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டி இருந்தனர்.

  ஸ்கூல் பசங்க பார்க்கவே கூடாது

  ஸ்கூல் பசங்க பார்க்கவே கூடாது

  ஸ்பானிஷ் வெப்சீரிஸான Elite பணக்கார பசங்க படிக்கிற பள்ளியில் இப்படியெல்லாமா நடக்கும் என நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசத்தையும் பணத் திமிரையும் அங்கே நடக்கும் கொலைகள், விசாரணைகள் என நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்களை காட்சிகளாக உருவாக்கி உள்ளனர். கண்டிப்பாக இந்த வெப்சீரிஸை மட்டும் ஸ்கூல் பசங்களை பார்க்கவே விடக் கூடாது என ஏகப்பட்ட பேர் விமர்சித்துள்ள வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஹவுஸ் ஆஃப் தி டிராகன்

  ஹவுஸ் ஆஃப் தி டிராகன்

  கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸே முழு நிர்வாணக் காட்சிகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். அதன் ப்ரீக்வெலாக தற்போது வெளியாகி உள்ள ஹவுஸ் ஆஃப் தி டிராகன் அதை விட மோசமாக கள்ளக் காதல் வெப்சீரிஸாகவே டிராகன்களின் பிரம்மாண்டங்களுக்கும் ராஜாங்கத்தில் நடக்கும் அந்தப்புற சதி லீலைகளுக்கும் குறைவில்லாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிக் கொண்டிருக்கிறது.

  English summary
  Top 7 Hot OTT web series which makes you sleepless nights are here. You will just watch the webseries alone only and not with your family and friends for the sensual contents.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X