பொன்னியின் செல்வன் ஓடிடியில் எப்போது வருகிறது?..வெளியான தகவல்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார்.
இத்திரைப்படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன்,விக்ரம் பிரபு, பிரபு,நாசர், பிரகாஷ் ராஜ்,ரகுமான் என ஏராளமானோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்
எம்.ஜி.ஆர்,கமல்ஹாசனின் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்.

குறையாத வசூல்
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடுவதும், குறைவதுமாக இருந்தது.

நம்பர் 1 இடத்தில்
பொன்னியின் செல்வன் படத்தின் மீது மக்களுக்கு இருந்த ஆர்வத்தால், ரூ.450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி உள்ளது. கமலின் விக்ரம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.190 கோடி வசூலித்து முதலிடத்திலிருந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.200 வசூலித்து தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது படம் வரும் நவம்பர் 4ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பொன்னியின் செல்வன் படத்தை அமேசான் ப்ரைம் ஓ.டி.டி.யில் ரூ.125 கோடிக்கு விலைபோய் உள்ளதாக ஏற்கனவே தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வரும் நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











