Ponniyin Selvan 2 : பொன்னியின் செல்வன் 2 ஓடிடியில் ரிலீஸ்…ஆனால், ஒரு ட்விஸ்ட்!

சென்னை : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் 2 நாவலை அடிப்படையாகக் கொண்டு 2 பாகங்களாக உருவானத் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படம் பான் இந்திய திரைப்படமாக 5 மொழிகளில் வெளியானது.

ponniyin selvan 2 ott release date announced

பொன்னியின் செல்வன் 2 :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் சாதனை படைத்தது.

முன்னணி நடிகர்கள் :

கடந்த ஏப்ரல் 28ந் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் :

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதிக பொருட்செலவில் 'மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த படத்தை தயாரித்தனர். இப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன போதும், மால் திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ponniyin selvan 2 ott release date announced

ரூ 337.75 கோடி வசூல் :

மேலும், பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலானதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர் பங்காக 51 கோடி ரூபாய்தான் கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படம் 28 நாட்களில் உலக அளவில் ரூ.337.75 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஓடிடியில் :

ரசிகர்களின் பேராதரவை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் மே 26 ஆம் தேதி பணம் கட்டி பார்க்கும் ரெண்ட்டல் முறையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ஜூன் 2வது வாரத்தில் இருந்து அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் இலவசமாகப் பார்க்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X