Ponniyin Selvan 2 OTT: ஓடிடியில் பொன்னியின் செல்வன் 2 எப்போ வருது தெரியுமா? ஹாட் அப்டேட் இதோ!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான நிலையில், 2ம் பாகமும் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

3 வாரங்களை கடந்தும் தியேட்டரில் பொன்னியின் செல்வன் 2 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஓடிடி ரசிகர்கள் பார்வைக்கு அந்த படம் வெளியாக காத்திருக்கிறது.

Ponniyin Selvan 2 OTT release date update is here

பொன்னியின் செல்வன் 2 வசூல்: சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

கடந்த 3 வாரங்களாக பெரிதாக எந்தவொரு பெரிய படங்களும் வெளியாகாத நிலையில், தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 தியேட்டர்களில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. வார நாட்களில் வசூல் டல் அடித்தாலும், வீக்கெண்டுகளில் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் கல்லா கட்டி வருவதாக கூறுகின்றனர்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டிக்கெட் புக்கிங் சூடுபிடித்த நிலையில், 350 கோடி வரை இந்த வார இறுதியில் பொன்னியின் செல்வன் 2 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ் தேதி: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

சமந்தாவின் சாகுந்தலம், யாத்திசை என அமேசான் பிரைம் ஓடிடியில் தான் தொடர்ந்து புதிய படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம் ஜூன் 28ம் தேதி வெளியாகும் என அப்டேட் கிடைத்துள்ளது.

Ponniyin Selvan 2 OTT release date update is here

இந்த ஆண்டின் அதிக வசூல்: விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட படங்கள் ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய நிலையில், ஏப்ரல் இறுதியில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அந்த இரு படங்களின் வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன் 2 வசூலை விஜய்யின் லியோ, கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் எந்த படம் முறியடிக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X