'போர் தொழில்' OTT Release: போர்த்தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்பொழுது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!!

சென்னை: நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள படம் போர் தொழில்.

சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது. விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Actor Sarathkumar -Ashok selvan combination Por Thozhil movie will be released in in OTT

சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் போர் தொழில் படம்: நடிகர் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பேர் தொழில். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கட்டிப் போட்டது. இந்தப் படத்தின் காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்தது.

அடுத்தடுத்து பெண்கள் கொல்லப்பட, அதை துப்பறியும் சரத்குமார், அவருடன் அசிஸ்டெண்டாக இணையும் அசோக் செல்வன் என படத்தின் ஆரம்பமே களைகட்டியது. அதிகமான பொருட்செலவு இல்லாமல், ஆக்ஷன் காட்சிகளும் இல்லாமல் வெளியான இந்தப் படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. குறிப்பாக இந்தப் படத்திற்கு அதிகப்படியான பிரமோஷன்களும் செய்யப்படவில்லை. ஆனால் Word of mouth மூலம் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

Actor Sarathkumar -Ashok selvan combination Por Thozhil movie will be released in in OTT

படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. குறைவான திரையரங்குகளில் துவக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் தியேட்டர்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டன. படத்திற்கு சென்னையில் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு, இரவுக்காட்சிகளும் அறிவிக்கப்பட்டன. படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. முன்னதாக வெளியான ராட்சசன் படமும் இதே பாணியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் போர் தொழில் படமும் அதிகமான ரசிகர்களை கட்டிப் போட்டது.

இந்தப் படத்தின் க்ளைமாக்சில், சரத்குமார், அசோக் செல்வன் இருவரும், தங்களது அடுத்த வழக்கை எதிர்கொள்ளும்வகையில் செல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் சீனியர் போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமார், தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பு செய்யும் வகையில், படத்தில் சிரிக்காமல் சீரியசாக நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தார்.

இந்நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய போர் தொழில் படம், தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சோனி Livல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகமான ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், போர் தொழில் படமும் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று எர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X