Por Thozhil: போர் தொழில் மூவிய தியேட்டர்ல மிஸ் பண்ணவங்களா நீங்க..? இதோ ஓடிடி ரிலீஸ் தேதி!

சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியானது.

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் தரமான வரவேற்பு கிடைத்தது.

மினிமம் பட்ஜெட்டில் உருவான போர் தொழில் 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர் தொழில் ஓடிடி ரிலீஸ் தேதி:எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கடந்த 9ம் தேதி ரிலீஸான போர் தொழில் திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் தரமான மேக்கிங்கில் புதிய அனுபவத்தை கொடுத்தது போர் தொழில். அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு, நிகிலா விமல் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

 Por Thozhil: Por Thozhil movie expecting streaming on Sony Liv OTT from July 7th

சைக்கோ திரில்லர் ஜானரில் அட்டகாசமான திரைக்கதையுடன் போர் தொழில் படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ் ராஜா. அடுத்தடுத்து இளம் பெண்கள் சிலர் கொலை செய்யப்பட, கொலையாளி யார் என்பதை தேடும் சாதாரண கதை தான் இது. ஆனாலும், ஒவ்வொரு காட்சியிலும் பல திருப்பங்களுடன் ரசிகர்களை சீட்டின் நுணியில் அமரவைத்து ட்விஸ்ட் கொடுத்திருந்தார்.

இதுவே போர் தொழில் திரைப்படம் சக்சஸ் ஆக முக்கியமான காரணமாகும். 20 கோடி பட்ஜெட்டுக்குள் உருவான போர் தொழில் இதுவரை 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் சூப்பரான கலெக்‌ஷனுடன் மாஸ் காட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இப்போதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போர் தொழில் திரைப்படம், ஜூலை 7ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் படக்குழு தரப்பில் இருந்து, ஓடிடி ரிலீஸ் குறித்த அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி ஹீரோக்களின் படங்கள் முதல் மினிமம் பட்ஜெட் திரைப்படங்கள் வரை அனைத்துமே ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாகின்றன. அதனால், போர் தொழில் படமும் ஜூலை 7ம் தேதி வெளியாகிவிடும் என உறுதியாக சொல்லப்படுகிறது. இதனால் இப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போன ரசிகர்கள், ஓடிடியில் பார்ப்பதற்கு ரெடியாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X