Kalki 2898 A.D OTT : உலகையே கலக்கி வரும் கல்கி 2898 ஏ.டி., ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?
சென்னை: இந்திய அளவில் ஒரு சினிமாவுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து அந்த படம் ரிலீஸ் ஆகி திரும்பும் திசையெல்லாம் நல்ல வரவேற்பு வந்து கொண்டு உள்ளது என்றால் கல்கி 2898 ஏ.டி திரைப்படம்தான். வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், ஷோபனா, அன்னா பென் உள்ளிட்டோரின் நடிப்பில் நேற்று அதாவது ஜூன் 27ஆம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மொத்தம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடும் இந்த படம் உலகம் முழுவதும் 2டி மற்றும் 3டி-களில் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று ஒருநாள் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு வெளிநாடுகளிலும் இருந்தது. இதனால் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் கிட்டத்தட்ட 40 கோடிகளைக் குவித்தது.

மேலும் படம் ரிலீஸான முதல் நாளில் மட்டும் படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்திருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகின்றது. படத்திற்கான டிக்கெட் விற்பனையில் மும்பையில் ஒருசில தியேட்டர்களில் ரூபாய் 1500 முதல் 2300 வரை ஒரு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல்களும் அதிகாரப்பூர்வமாகவே வெளியானது. இது மட்டும் இல்லாமல் ஆந்திராவில் இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் ரூபாய் 75இல் இருந்து 125வரை உயர்த்தப்பட்டது.

விசுவல் ட்ரீட்: படம் மகாபாரதக் கதையை மைய்யப்படுத்தி அதில் சைன்ஸ் ஃபிக்ஸன் கலந்த படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. படம் முழுவதுமே விசுவல் ட்ரீட் தான். படத்தின் நாயகன் யார் என ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு பிரபாஸும் அமிதாப் பச்சனும் மாறி மாறி ஸ்கோர் செய்கின்றனர். படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை படம் முழுவதும் பிரமாண்டமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே திரையிடப்பட்டது.

கல்கி சினிமேட்டிக் யுனிவர்ஸ்: படத்தின் க்ளமேக்ஸ் காட்சி முடிந்த பின்னர் வரக்கூடிய கல்கி சினிமேட்டிக் யுனிவரஸ் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் படத்தை அதிகப்படியான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான வசூல் வேட்டையைப் பார்க்கும்போது படம் கட்டாயம் வசூலிலும் வெற்றிப் படமாக அமையும் என கூறப்படுகின்றது.

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் கல்கி 2898 ஏ.டி படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றது. படத்தின் ஓடிடி உரிமத்தை ஏற்கனவே அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூபாய் 175 கோடிக்கு வாங்கியுள்ளது. கல்கி 2898 ஏ.டி ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகும் என கூறப்படுகின்றது. இருந்தாலும் படம் எப்போது ஓ.டி.டி., தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு தரப்பில் இருந்தோ அமேசான் ப்ரைம் தரப்பில் இருந்தோ தெரிவிக்கப்படவில்லை. முதல் நாள் வசூல் கணிப்பு மற்றும் ஓ.டி.டி., விற்பனையை கணக்கிட்டுப் பார்க்கும்போதே கல்கி 2898 ஏ.டி படத்தின் கலெக்சன் இப்போதே சுமார் 375 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











