Kalki 2898 AD OTT: தியேட்டரில் ரூ. 1100 கோடியை அள்ளிய கல்கி 2898 ஏ.டி.. 2 ஓடிடி தளங்களில் ரிலீஸ்!

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியது. படம் ரிலீஸான முதல் நாளே ரூபாய் 191.5 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. இதில் முன்பதிவில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 40 கோடி வசூல் செய்தது. மேலும் வட அமெரிக்காவில் மட்டும் படம் வெளியான முதல் வாரத்திலேயே ரூபாய் 100 கோடியை அள்ளியது. இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, அன்னா பென், தீஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் மகாபாரதக் கதையைத் தழுவி எதிர்கால அறிவியல் வளர்ச்சியை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படம் 3டி மற்றும் ஐமேக்ஸிலும் வெளியானது.

Kalki 2898 AD Kalki 2898 AD OTT

படம் முதல் நாளே இந்தியா முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சிறப்புக் காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பப்பட்டன. இது மட்டும் இல்லாமல் படத்தினை தயாரித்த வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக ரூபாய் 600 கோடி செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்தது. இதனால் படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது.

Kalki 2898 AD Kalki 2898 AD OTT

1100கோடி வசூல்: படம் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் உலகம் முழுவதும் ரூபாய் 1100 இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த வசூல் படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்தில் வசூல் ஆனதுதான். இதுவரை படம் கிட்டத்தட்ட 1200 கோடிகளை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் ரூபாய் 1500 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது. அதன் பின்னர் வந்த சலார் படம் ரூபாய் 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. சலாருக்கு முன்னர் வெளியான ஆதிபுருஷ் ரூபாய் 500 கோடிகளைக் கூட வசூல் செய்யவில்ல

Kalki 2898 AD Kalki 2898 AD OTT

ஓடிடி ரிலீஸ்: கல்கி 2898 ஏ.டி படம் இன்று அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் மொத்தம் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. அதாவது கல்கி 2898 ஏ.டி படத்தின் ஹிந்தி வெர்ஷன் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று முதம் ஸ்ட்ரீம் ஆகின்றது. அதேபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய வெர்ஷன் படங்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

Kalki 2898 AD Kalki 2898 AD OTT

இரண்டாம் பாகம்: படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுவிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இரண்டாம் பாகத்தில் பெரும்பாலும் உலக நாயகன் கமல் ஹாசன் இடம் பெறும் காட்சிகள்தான் இருக்கும் என்பதால் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Kalki 2898 AD Kalki 2898 AD OTT

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X