Bujji and Bhairava Review: கல்கி படத்துக்கு முந்தைய கதை.. புஜ்ஜி & பைரவா ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி ஏடி2898 திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிறது. அந்த படத்திற்கு முன்னதாக கல்கி படம் நடக்கும் காலத்தையும் கதை மாந்தர்களையும் ரசிகர்களுக்கு புரிய வைக்கும் விதமாக அனிமேஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி அதை இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
புஜ்ஜி அண்ட் பைரவா என டைட்டில் வைத்துள்ள இந்த அனிமேஷன் படம் பாகுபலி அனிமேஷன் படத்தை விட சிறப்பாக உள்ளதாக டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #BujjiAndBhairava ஹாஷ்டேக்கில் புஜ்ஜி மற்றும் பைரவா படத்தின் விமர்சனங்களை காட்சிகளையும் ஷேர் செய்து ரசிகர்கள் இப்பவே கல்கி படத்தை பார்க்க ரெடியாகி விட்டனர்.

நாக் அஸ்வின் புஜ்ஜி அண்ட் பைரவா கதையை 2896 காலக்கட்டத்தில் உருவாக்கி இருப்பதாகவும், இதற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து தான் கல்கி படத்தின் 2898 ஏடி கதை நடக்கப் போகிறது என்பதையும் ரசிகர்கள் கண்டுபிடித்து ட்வீட் போட்டு வருகின்றனர்.
புஜ்ஜி அண்ட் பைரவா: ஹாலிவுட்டில் உருவாகும் சூப்பர் ஹீரோ படங்கள் எல்லாம் ஏற்கனவே காமிக்ஸாக வெளியானது தான். காமிக்ஸ் புத்தகங்களை பார்த்து அதற்கு அடிமையாகி கிடக்கும் ரசிகர்கள் திரையில் அந்த கதாபாத்திரங்களை பார்க்கும் போது அந்த படங்களை சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க வைத்து வருகின்றனர். அந்த வித்தையை நாக் அஸ்வின் இந்தியாவிலும் கொண்டு வரலாம் என நினைத்து புஜ்ஜி அண்ட் பைரவா அனிமேஷன் படத்தை இன்று ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். சூர்யாவின் அஞ்சான் படம் வெளியான காலத்தில் கார் கேம் எல்லாம் அனிமேஷனில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ரா ஒன், க்ரிஷ் படங்களுக்கும் இதுபோன்ற அனிமேஷன் புரமோஷன்கள் நடைபெற்றன.

காரை வைத்து புரமோஷன்: கல்கி படத்துக்காக ரியலாகவே வித்தியாசமான காரை நாக் அஸ்வின் மஹிந்த்ரா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளார். அந்த கார் சமீபத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தன. பிக் பாஸ் பிரபலமான ரவீனா தாஹா எல்லாம் அந்த காரில் உட்கார்ந்து பார்த்து புரமோஷன் செய்தனர். அந்த புஜ்ஜி காருக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். அனிமேஷன் வீடியோவிலும் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் டப்பிங் பேசியுள்ள நிலையில், ரசிகர்கள் அந்த அனிமேஷன் படத்தை பார்த்து வருகின்றனர்.
பிரபாஸ் கமெடி டைமிங்: எதிர்காலத்தில் நடக்கும் கதையாக உருவாகி உள்ள புஜ்ஜி அண்ட் பைரவா அனிமேஷன் படத்தில் பிரபாஸின் காமெடி டைமிங் எல்லாம் சூப்பராக உள்ளது என்றும் பிரம்மானந்தத்துடன் அவர் செய்யும் காமெடி எல்லாம் வேறலெவல் ரகளை என ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ஹாலிவுட்டுக்கு நிகராக: சிறு வயதிலிருந்து சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களையும் காமிக்ஸ் படங்களையும் பார்த்து வளர்ந்து வருகிறேன். இப்படியொரு ஹாலிவுட் தர படைப்பு தெலுங்கு சினிமாவில் இருந்து வந்திருப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. எதிர்காலத்தை காட்டியிருக்கும் இடங்களில் உள்ள டீட்டெய்லிங் மிரட்டுகிறது என இந்த ரசிகரும் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். கல்கி படத்தை பார்க்கும் முன்னதாக ரசிகர்கள் இந்த புஜ்ஜி அண்ட் பைரவா அனிமேஷனை பார்த்து விட்டால் அந்த படம் குறித்த புரிதல் அதிகம் இருக்கும் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











