எழவே முடியாத அளவிற்கு அடி வாங்கிய ‘தி ராஜா சாப்‘.. ஓடிடியில் தாக்குபிடிக்குமா? ஓடிடி ரிலீஸ் தேதி!

சென்னை: இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்த 'தி ராஜா சாப்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவர் 9ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் ரூ 400 கோடி ரூபாய் பட்ஜெட் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்படம் உலக அளவில் ரூ. 205 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளத.

அதிரடியாக கதாபாத்திரங்களில் நடிதிது வரும் பிரபாஸ், நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரர் பேண்டசி ஜானரில் வெளியாகி உள்ள இப்படத்தில், தாய், தந்தை இல்லாமல் அனாதையாக பாட்டியின் அரவணைப்பில் இருக்கிறார்.அந்த பாட்டி எப்போதுமே தொலைந்து போன கணவர் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். பாட்டி எல்லா விஷயமும் மறந்து போனாலும், தன் கணவர் பற்றிய எந்த விஷயத்தையும் அவர் மறக்வில்லை. பாட்டிக்காக அவரை தேடி பிரபாஸ் கிளம்புகிறார்.

Prabhas The Raja Saab OTT
Photo Credit:

தி ராஜா சாப் : அப்போது தான் சஞ்சய் தத் தான் தாத்தா என்கிற உண்மையும், அவர் ஒரு மாந்திரிகவாதி, பணத்தை திருடுபவர் என்றெல்லாம் தெரியவருகிறது. மறு பக்கம் சமுத்திரகனியும் சஞ்சய் தத் தேடி வருகிறார். இந்த நேரத்தில் தான் அரண்மனை ஒன்றுக்குள் செல்ல, அங்கு இருக்கும் பேயிடம் சிக்கி கொல்கிறார் பிரபாஸ். பிறகு என்ன ஆனது என்பதை நகைச்சுவை கதையாக நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் மலையாளத்தில் தெலுங்கு மொழி மாற்றுப் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் உலக அளவில் இப்படம் ரூ. 205 கோடியை வசூலித்தது.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில் 'தி ராஜா சாப்' திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி மாதம் 2வது வாரம் அதாவது 14ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறவிட்ட ரசிகர்கள் ஓடிடியில் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Read more about: prabhas ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X