தியேட்டரில் வெளியிட ஆள் இல்லை.. ஒரு வழியாய் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிரபு தேவாவின் படம்!
சென்னை: பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபு தேவா நடிப்பில் 2018 - 19 இல் அறிவிக்கப்பட்ட படம் பொன் மாணிக்கவேல். இதில் பொன் மாணிக்கவேல் என்ற கதாப்பாத்திரத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்திருக்கிறார்.
பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபு தேவா அசிஸ்டெண்ட் கமிஷனராக நடித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

ஜோடியாக நிவேதா பெத்துராஜ்
நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன் வரவில்லை
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது ரிலீஸுக்கு தயாரானது. ஆனால் பிரபு தேவாவின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் பொன் மாணிக்கவேல் படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை என கூறப்பட்டது.

ரிலீஸ் ஆவதில் சிக்கல்
இதேபோல் படத்தின் மீதான நிதி சிக்கல்களும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் சரிவர இயங்காததால் பொன் மாணிக்கவேல் படம் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

ஹாட் ஸ்டாரில் ரிலீஸ்
இந்நிலையில், இப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் படத்தை வெளியிட முன்வந்துள்ளது. இந்த மாதம் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பல படங்கள்
இதனிடையே இந்தப் படத்தின் ட்ரெயிலரும் இன்று வெளியாகியுள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார் நடிகர் பிரபு தேவா. இதனிடையே பிரபு தேவா நடிப்பில் தேள், யங் மங் சங், ஊமை விழிகள், பஹீரா, ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











