LIK OTT Release: பெத்த தொகைக்கு பிசினஸ் ஆன பிரதீப் ரங்கநாதனின் LIK.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள LIK படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். லவ் டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் சதத்தை பாக்ஸ் ஆபீஸில் அடித்த பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி, கெளரி கிஷன் நடித்துள்ளனர். மேலும், சீமான், மாளவிகா, யோகி பாபு, சோபா பாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூரியன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியை 2040ல் நடத்தும் எஸ்.ஜே. சூர்யா ஒரு ஆப் அறிமுகப்படுத்துகிறார். அந்த ஆப் காதலர்கள் இருவரில் யாராவது பொய் சொன்னாலோ அந்த காதல் செட்டாகாது என்று நினைத்தாலோ அலர்ட் செய்துவிடும்.

Pradeep Ranganathan s LIK Movie OTT expected release date update is here
Photo Credit:

அப்படி ஹீரோவை பிரேக்கப் செய்துவிட்டுப் போகும் போன் பாப்பாவான ஹீரோயினை அவர் மீண்டும் எப்படி காதலிக்க வைக்கிறார் என்பதே படத்தின் கதை என தெரிகிறது. ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் எல்ஐகே படத்தின் டிஜிட்டல் உரிமம் பல கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பதியில் விக்னேஷ் சிவன், நயன்தாரா: நடிகை நயன்தாரா தனது திருமணத்தையே திருப்பதியில் நடத்த வேண்டும் என பல முயற்சிகளை செய்தார். ஆனால், கடைசி வரை அவருக்கு அங்கே அனுமதி கிடைக்கவில்லை. பல முறை திருப்பதி சென்று வந்துள்ள அவர் தற்போது நாளை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், திருப்பதிக்கு சென்று கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாக வேண்டியது. ஆனால், டியூட் படத்தை தான் வெளியிடுவோம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் உறுதியாக இருந்த நிலையில், டியூட் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி 100 கோடி வசூல் வேட்டை நடத்தியது. எல்ஐகே படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையாகாதது தான் படம் வெளியாக தாமதம் ஆக காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிராகன், டியூட் படங்கள் ஓடிடியில் சக்கைப் போடு போட்ட நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனியையும் நம்பி வாங்கியுள்ளனர்.

ஓடிடி ரிலீஸ் தேதி எப்போ?: சமீப காலமாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கங்கள் படம் வெளியான 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பல படங்கள் 4 வாரங்களில் வெளியாகி விடுகின்றன. ஏப்ரல் 10ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள எல்ஐகே திரைப்படமும் 4 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் தியேட்டரில் தாய் கிழவி போல நல்ல வசூல் ஈட்டினால் 8 வாரம் கழித்துக் கூட வெளியாகும் என்கின்றனர்.

மே 8ம் தேதி அதிகபட்சமாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிந்ததும் சம்மருக்கு கண்டிப்பாக தியேட்டருக்கு பிரதீப் ரங்கநாதன் படத்தை குழந்தைகளுடன் பெற்றோர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X