அண்ணாச்சி படத்தை முந்திய LIK.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. ஒரு மாசத்துக்கு முன்னாடியே வருது!

சென்னை: லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் திரைப்படமே இன்னமும் ஓடிடியில் வெளியாகாத நிலையில், அந்த படத்திற்கு பின்பு வெளியான விக்னேஷ் சிவனின் எல்ஐகே திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆவதற்கு முன்பாகவே ஓடிடியில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமான கோமாளி படம் முதல் அவர் ஹீரோவாக நடித்த லவ் டுடே, டிராகன் மற்றும் டியூட் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்ற நிலையில், தம்பிக்கு ஒரு ஃப்ளாப் பார்சல் என பிரதீப் ரங்கநாதனை வைத்து செய்துவிட்டார் விக்னேஷ் சிவன் என பலமாக கலாய்த்து வருகின்றனர்.

Pradeep Ranganathan s LIK will release before Legend Saravanan s Leader on OTT
Photo Credit:

சம்மர் ஹாலிடேவில் குழந்தைகள் படத்தை பார்த்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குழந்தைகளை கூட்டிக் கொண்டு பெற்றோர்கள் வரணுமே என்பதை படக்குழு மறந்துவிட்டது தான் பிரச்னை என்கின்றனர்.

லீடர் படம் இன்னும் வரல: அமேசான் பிரைம் ஓடிடி தளம் தான் லீடர் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்களை வாங்கியுள்ளது. மே 1ம் தேதியே லீடர் படம் ஓடிடியில் வெளியாகும் என வதந்திகள் கிளம்பிய நிலையில், மே 15ம் தேதிக்கு மேல் தான் லீடர் படம் ஓடிடியில் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. லீடர் படத்துக்கு முன்பாக பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே படத்தை ஓடிடியில் வெளியிட அமேசான் பிரைம் முடிவு செய்துள்ளது.

எல்ஐகே ஓடிடி ரிலீஸ்: ஏப்ரல் 3ம் தேதி லீடர் மற்றும் காளிதாஸ் 2 படங்கள் தியேட்டரில் வெளியாகின. ஏப்ரல் 10ம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், மாளவிகா நடிப்பில் வெளியான எல்ஐகே திரைப்படம் மே 6ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.

அடுத்த படத்துக்கு சிக்கல்: தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படமே பிரதீப் ரங்கநாதனுக்கு கடும் விமர்சனங்களை பெற்றுத் தந்து சிக்கலில் சிக்க வைத்தது. டிராகன் வெற்றியை டியூட் பெற்ற நிலையில், டியூட் படத்தின் சர்ச்சைகள் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அறுவடை செய்திருப்பதாக கூறுகின்றனர். பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என்றும் அடுத்த படத்தை அவர் கவனமுடன் செய்யவில்லை என்றால், ரொம்ப கஷ்டம் என்று கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X