Premalu movie: தள்ளிப் போன பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்ப தெரியுமா?
சென்னை: மலையாளப் படங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. எப்போதுமே சிறப்பான கதைக்களங்களை கொண்டு மலையாளப் படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில் தற்போது வெளியாகும் ஒவ்வொரு படங்களும் ஏராளமான ரசிகர்களை குறிப்பாக தமிழ் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் படங்கள் அதிக கவனத்தைப் பெற்று தமிழிலும் கணிசமான வசூலை பெற்று வருகின்றன. குறிப்பாக மஞ்சுமெல் பாய்ஸ் படம், பாதி தமிழ் படமாகவே வெளியாகி மாஸ் காட்டியது.
கடந்த பிப்ரவரி 9ம் தேதி மலையாளத்தில வெளியாகி சக்கை போடு போட்டது பிரேமலு படம். இந்தப் படத்தின் வரவேற்பை தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு படம் வெளியானது. தொடர்ந்து தமிழிலும் கடந்த மார்ச் 15ம் தேதி தமிழில் இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. படம் சர்வதேச அளவில் 150 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது. காமெடி மற்றும் காதலை மையமாக கொண்டு படம் வெளியான நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். க்ரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை பகத் பாசில் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

பிரேமலு படம்: மலையாளப் படங்களுக்கு ரசிகர்களிடையே சர்வதேச அளவில் கவனம் ஏற்பட்டுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் என அடுத்தடுத்து பட்டையை கிளப்பி வருகன்றன மலையாள படங்கள். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி மலையாளத்தில் ரிலீசான பிரேமலு படம் சிறப்பான வகையில் ஹிட்டடித்தது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் சர்வதேச அளவில் 150 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளது. இதையடுத்து தெலுங்கிலும் தொடர்ந்து கடந்த மார்ச் 15ம் தேதி தமிழிலும் இந்தப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையில் வசூலையும் குவித்துள்ளது.
வரவேற்பை பெற்ற பிரேமலு: க்ரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியான இந்தப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளா, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் படம் பெஸ்ட் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில் 150 கோடிக்கும் மேல் படம் வசூலித்துள்ளது. காதல் மற்றும் நகைச்சுவை கலந்து படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தை பகத் ஃபாசில், தினேஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் நஸ்ரின் கே கபூர், மேத்யூ தாமஸ், மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், அகில பார்க்கவன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ஓடிடி ரிலீசில் மாற்றம்: மிகவும் இயல்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கை கொடுத்துள்ளது. தமிழ் டப்பிங்கும் பெரிதாக உறுத்தல் இல்லாமல் நன்றாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழ் ரசிகர்களுக்கும் இந்த படம் மிகப்பெரிய விருந்தை கொடுத்துள்ளது. இந்தப்படம் இம்மாதம் 29ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 11 அல்லது 12ம் தேதிகளில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை மமீதா பைஜூ: படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது, திரையரங்குகளில் கடந்த சில வாரங்களில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள இந்த படம் ஓடிடியிலும் ஏராளமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் மமீதா பைஜூவிற்கு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. தமிழிலும் அதிகமான படங்களில் நடிக்க அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் மமீதா பைஜூ.


Click it and Unblock the Notifications











