ஓடிடியில் வெளியானது பிரேமலு… தொடர்ந்து சிக்கலில் மஞ்சும்மல் பாய்ஸ்!

சென்னை: மலையாளத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் 100 கோடிகளைத் தாண்டி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் மஞ்சுமல் பாய்ஸ் பெரும் சாதனையை படைத்த நிலையில், அதற்கு ஈடாக வசூலை அள்ளி பிரேமலு திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் பிரேமலு. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் மொத்தம் ரூ.135 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Premalu movie streaming now disney plus hotstar

ஓடிடியில் பிரேமலு: மேலும் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் டாப் 5 இடங்களில் பிரேமலு இருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த மாதம் 8 ஆம் தேதி வெளியானது. அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாகத் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் ஓடிடியில் பார்க்க ஆர்வம் காட்டி உள்ளனர்.

சிக்கலில் மஞ்சும்மல் பாய்ஸ்: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு முன்பே தியேட்டரில் வெளியான பிரேமலு திரைப்படமே இன்று வெளியாகி விட்ட நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடியில் தற்போது வரை வெளியாகவில்லை. ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகி உள்ள நிலையில், ஓடிடியில் படத்தை குறைந்தபட்சம் ரூ.20 கோடிக்காவது விற்றுவிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்ததால், படம் ஓடிடியில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 5ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை. தற்போது அவரை வெளியாகததற்கான காரணம் தெரிவில்லை.

Premalu movie streaming now disney plus hotstar

தெலுங்கில்: மேலும், இத்திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 6ந் தேதி திரையரங்கில் வெளியானது. தெலுங்கிலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேறபு கிடைத்துள்ளது. மலையாளத்தை கடந்து தமிழிலும் எப்படி இப்படி உணர்ச்சிப்பூர்வமாக கனெக்ட் ஆனதோ அதே ஃபீல் மற்றும் அதே எமோஷனுடன் தெலுங்கிலும் ரசிகர்கள் மத்தியில் வரவற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் பல திரையரங்குகளில் இப்படத்திற்கு ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X