Premalu OTT: பிரேமலு ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. அப்போ இந்த வாரம் தியேட்டருக்கு போக வேண்டாமா?

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு மலையாளத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 9ம் தேதி வெளியான பிரேமலு திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழில் டப் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படி அவசர அவசரமாக ஆங்கில படத்துக்கு டப் செய்யப்படுவது போல மோசமாக டப் செய்யப்பட்டுள்ளதே என்ன விஷயம் என விசாரித்தால் அதன் ஓடிடி ரிலீஸ் விரைவில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாவது தான் காரணம் என்கின்றனர்.

இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இன்னமும் எந்தவொரு ஓடிடியிலும் வெளியாகவில்லை. வரும் மார்ச் 16ம் தேதி ஜியோ சினிமா மற்றும் ஜீ5 ஓடிடி தளங்களில் வெளியாக போகிறது.

Premalu OTT release date and platform details leaked

மலையாளத்தில் 100 கோடி வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் தற்போது வெளியாகி இருப்பது ஓடிடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் நிலைமை: தியேட்டரில் அதிகபட்சமாக 160 கோடி ரூபாய் வசூலை வெறும் 21 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பல மடங்கு வசூல் சாதனை செய்த நிலையில், பெரிய தொகைக்கு தான் ஓடிடி வியாபாரத்தையும் செய்வோம் என உறுதியுடன் உள்ளனர். ஆனால், 10.5 கோடிக்கு வேண்டுமென்றால் வாங்கிக் கொள்கிறோம் என நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் வியாபாரம் பேசி வரும் நிலையில், டீல் ஓகே ஆகவில்லையாம். கூடிய விரைவில் 15 கோடி கொடுத்து யாராவது வாங்க முன் வந்தாலும் மஞ்சுமெல் பாய்ஸ் ஓடிடி வியாபாரம் நடைபெற்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்கின்றனர்.

பிரேமலு ஓடிடி ரிலீஸ்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியாகி 110 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ள பிரேமலு திரைப்படம் தனது ஓடிடி விற்பனையை வெற்றிகரமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நடத்தி உள்ளதாக கூறுகின்றனர். வரும் மார்ச் 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பிரேமலு திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாக போகிறது. இந்த ஆண்டு வெளியான மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படத்தையும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தான் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தியேட்டரில் இந்த வாரம்: அதன் காரணமாகவே அவசர அவசரமாக தமிழ் டப்பிங்கை முடித்த நிலையில், மார்ச் 15ம் தேதி தியேட்டரில் பிரேமலு தமிழ் வெர்ஷன் வெளியாகிறது. மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளத்தில் இங்கே ரிலீஸ் ஆன நிலையிலேயே 34 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. நாம தமிழில் படத்தை ரிலீஸ் செய்து கணிசமான தொகையை வசூல் செய்யலாம் என திட்டத்துடன் களமிறங்கி உள்லனர். ஆனால், அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது கசிந்த நிலையில், ரசிகர்கள் கொஞ்சம் வெயிட் பண்ணால் டிவியிலேயே பார்த்து விடலாமே என ஜகா வாங்கி வருவதாக கூறுகின்றனர்.

டப்பிங் சொதப்பல்: மேலும், பிரேமலு படத்தன் தமிழ் டப்பிங் ரொம்பவே சுமாராக இருப்பதாகவும் மோசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கள்ளி என ஹீரோயினை பார்த்து மலையாளத்தில் ஹீரோ சொல்லும் வசனத்தை இங்கே ஐட்டம் என டப் செய்து வைத்திருக்கின்றனர் என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X