Pritam and Pedro Review: ப்ரித்தம் அண்ட் பெட்ரோ விமர்சனம்.. ராஜ்குமார் ஹிரானி மகனின் நடிப்பு எப்படி?

சென்னை: வசூல் ராஜா எம்பிபிஎஸ், நண்பன் படங்களின் ஒரிஜினல் இந்தி வெர்ஷன் படங்களான முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி திரைக்கதை எழுதி தயாரித்துள்ள வெப்சீரிஸ் தான் ப்ரித்தம் அண்ட் பெட்ரோ (Pritam and Pedro). தனது மகன் விர் ஹிரானியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாரில் ஜூலை 3ம் தேதியான நேற்று முதல் இந்த புதிய வெப்சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

கிரைம் பிரான்ச் அதிகாரியான பெட்ரோ மற்றும் சைபர் கிரைமில் கில்லாடியான ப்ரித்தம் இணைந்து காணாமல் போகும் விளையாட்டுத் துறை அமைச்சரின் மகனை கண்டுபிடிக்கும் கதையை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை கலந்தும் அதே நேரத்தில் ப்ளூ வேல் போன்ற சைபர் குற்ற விளையாட்டுகளின் கொடுமைகளையும் எடுத்துக் கூறியுள்ள கதையாக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது.

Pritam and Pedro Jio Hotstar Web Series Review in Tamil
Photo Credit:

6 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸை துரந்தர் படம் பார்க்கும் அளவுக்கு 3.30 மணி நேரம் ஒதுக்கினால் பார்த்து விட முடியும். Hidden Files Returns மற்றும் Return of the Trojan Horse உள்ளிட்ட உண்மையான சைபர் கிரைம் குற்ற வழக்குகளின் அடிப்படியையில் சைபர் அதிகாரி அமித் துபே எழுதிய நாவல்களின் அடிப்படையாக கொண்டு இந்த வெப்சீரிஸை ராஜ்குமார் ஹிரானி எழுத அவினாஷ் அருண் இயக்கியுள்ளார். 6 வெப்சீரிஸ்கள் எப்படி இருந்தன? ஓடிடி ரசிகர்கள் இந்த வாரம் பார்க்க இது வொர்த்தான வெப்சீரிஸா? இல்லையா? என்பது குறித்து விவரமாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

ப்ரித்தம் அண்ட் பெட்ரோ வெப்சீரிஸ் கதை: ஹேக்கிங்கில் கெட்டிக்காரரான ப்ரித்தம் (விர் ஹிரானி) சாதாரண வேக்கம் க்ளீனர் வியாபாரியாக உள்ளார். தனது தாத்தாவின் தொலைந்து போன ரேடியோவை கண்டுபிடிக்க போலீஸில் புகார் அளிக்கிறார். அதில், தனது இறந்து போன பாட்டியின் தனித்துவமான பாடல் அடங்கியிருப்பதால், தாத்தாவுக்கு அது ரொம்ப முக்கியம் என புகார் கொடுக்க வரும் இடத்தில் கிரைம் பிரான்ச் உயர் காவல் அதிகாரியான பெட்ரோவுக்கு (அர்ஷத் வர்சி) ஒரு ஏடிஎம் மெஷின் திருட்டு வழக்கில் உதவி செய்ய அவருடன் நட்பாகிறார்.

அடுத்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் வீட்டில் அவரது மனைவியின் ஸ்மார்ட்போன் காணவில்லை என்கிற புகாரை விசாரிக்கும் பணி பெட்ரோவுக்கு கிடைக்க, அமைச்சரின் மகனை விசாரித்தால் கிடைத்து விடும் என்கின்றனர். ஆனால், அமைச்சர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதன் பின்னர், ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான திருடன் தான் போனை திருடிவிட்டார் என புதிய போன் ஒன்றை வாங்கிக் கொடுக்க, ஏற்கனவே அமைச்சரின் மகனிடம் இருந்து போன் கிடைத்து விட்டதாகவும் பொய்யான வழக்கை செட் செய்ததற்காக உன்னை தண்டிக்கிறேன் என கிரைம் பிரான்ச்சில் இருந்து சைபர் கிரைமுக்கு பெட்ரோவை அமைச்சர் தூக்கி அடிக்கிறார்.

அங்கே அவருக்கு மீண்டும் ப்ரித்தமின் உதவி தேவைப்படுகிறது. மேலும், விளையாட்டுத்துறை அமைச்சரின் மகன் வின்னி கடத்தப்படுகிறான். பெட்ரோ மற்றும் ப்ரித்தம் இருவரும் இணைந்து தொலைந்துப் போன அமைச்சரின் மகனை கண்டுபிடித்தார்களா? இல்லையா? ப்ரித்தமின் பாஸ்ட் என்ன? என்பதை செம சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் வெப்சீரிஸ் தான் இந்த ப்ரித்தம் அண்ட் பெட்ரோ.

பார்க்கலாமா? வேண்டாமா?: உண்மை சம்பவங்களை அடிப்படையில் வைத்து உருவாக்கப்பட்ட லைட் ஹார்ட்டட் வெப்சீரிஸாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது. ப்ரித்தமாக நடித்துள்ள ராஜ்குமார் ஹிரானியின் மகன் விர் ஹிரானிக்கே தண்ணி காட்ட வில்லனாக பாலிவுட் நடிகர் விக்ராந்த் மசாய் பழிவாங்கத் துடிக்கும் ஹேக்கராக நடித்துள்ளார். 3 இடியட்ஸ் படத்தில் புரொஃபசராக நடித்த பொம்மன் ஹிரானி இந்த படத்திலும் புரொஃபஸராக வருகிறார். மேலும், கிளைமேக்ஸில் சஞ்சய் தத், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கேமியோக்களும் அசத்தல் என்ட்ரி கொடுக்கின்றனர்.

ஏடிஎம் மெஷின் திருட்டு, செல்போன் திருட்டு என சாதாரணமாக தொடங்கும் கதை அதன் பின்னர் கள்ளக்காதல், பழிவாங்கும் கதை என பல ட்விஸ்ட்டுகளுடன் நகர்வது பார்க்கத் தூண்டுகிறது. அதிகளவில் ஆக்‌ஷன் மற்றும் இன்டென்ஸ் விரும்பிகளுக்கு இது எந்தளவுக்கு பிடிக்கும் என்பது டவுட்டு தான். மேலும், கோவா போலீஸிடம் உள்ள சைபர் கிரைம் பிரான்ச்சில் உள்ள காவல் அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்கிற சில லாஜிக் கேள்விகளையும் எழுப்பத்தான் செய்கிறது.

ராஜ்குமார் ஹிரானி பாணி படங்களை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த வெப்சீரிஸ் ஓகே ஓகே ரகமாகவே இருக்கும். ஒவ்வொரு எபிசோடும் அதிகபட்சம் அரை மணி நேரம் தான் என்பதால், இந்த வாரம் தாராளமாக ஒரு முறை இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். ப்ளூ வேல் பிரச்னையால் குழந்தைகள் மரணிப்பது உள்ளிட்ட சென்சிட்டிவான விஷயங்களை டச் செய்திருப்பதால் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மெசேஜும் உள் அடங்கியிருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் பக்காவான தமிழ் டப்பிங்குடன் இருப்பதால், இந்தி வெப்சீரிஸ் பார்க்கிறோம் என்கிற பஞ்சாயத்தே வராத வண்ணம் உள்ளது மிகப்பெரிய பிளஸ். ஆபாச காட்சிகள், அல்லது ஆபாச வசனங்கள் எல்லாம் இல்லாமல் ராஜ்குமார் ஹிரானி ஸ்டைலிலேயே ஒரு ஃபில் குட் சைபர் கிரைம் வெப்சீரிஸாகவே உள்ளது இந்த ப்ரித்தம் அண்ட் பெட்ரோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X