Aadujeevitham OTT: ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்.. எப்போது தெரியுமா?
சென்னை: இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த பிளாக் பஸ்டர் அடித்த திரைப்படம் த கோட் லைஃப் ஆடுஜீவிதம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரித்விராஜ் அமலா பால் நடிப்பில் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த ஆடுஜீவிதம். இப்படம் மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியானது. தியேட்டரில் வெளியான முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிக அளவில் இருந்தது.

ஆடுஜீவிதம்: வறுமையில் வாடும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நஜீப், தனது மனைவிக்காகவும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நண்பர் ஒருவரின் உதவியுடன் அரபுநாட்டுக்கு வேலை தேடி செல்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக பாலை வனத்தில் ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை கைதியாக வாழ்க்கையை வாழுகிறான். கேரளாவில் எங்கு பார்த்தாலும் தண்ணீர், பசுமை, மழை என பச்சை பசேல் என பார்த்தவனுக்கு, சுடும் மணல், குடிக்க தண்ணீர் அல்லாத பொட்டைக்காட்டில் அணு, அணுவாய் அனுபவிக்கும் சித்திரவதைக்கு உள்ளாகி தவிக்கிறான்.
உண்மைக்கதை: பாராட்டிய பிரபலங்கள்: இப்படி வாழ்க்கை வாழ்வதை விட சாவேதே மேல் என, பாம்புகள் உலாவும் இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற போதும், தன் மனைவியை நினைத்து அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறான். கடைசியில் நஜீப் அந்த நகர வாழ்க்கையில் இருந்து மீண்டாரா இல்லையா என்பதுதான் ஆடுஜீவிதம் படத்தின் கதை. படம் பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வர வைத்தது. இப்படத்தை பார்த்த, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டினர்.
வசூல் சாதனை படைத்த ஆடுஜீவிதம்: தன் உடலை வருத்தி கடினமாக உழைப்பை கொடுத்து நடித்திருந்த நடிகர் பிரித்விராஜுக்கு இந்த படம் நிச்சயம் தேசிய விருதை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் திரையில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். திரையிட்ட எல்லா இடங்களிலும் இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிய அந்த திரைப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஓடிடியில்: இந்நிலையில் இத்திரைப்படம் வரும் மே 26 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் டிஜிட்டல் உரிமை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதால், அந்த ஓடிடியில் ஒளிபரப்பாகும். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓடிடி நிறுவனம் இன்னும் வரவில்லை. பல புதிய வெளியீடுகள் இருந்தபோதிலும், தி கோட் லைஃப் ஒரு சிறந்த படம் என்பதால், இந்த படத்திற்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இந்த படத்தில் நாயகியாக அமலா பால் நடித்தார். பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு மாநிலங்களில் வெளியிட்டது. படத்தில் ஜிம்மி ஜீன் லூயிஸ், ரிக் அபி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷுவல் ரொமான்ஸ் இமேஜ் மேக்கர்ஸ், ஜெட் மீடியா புரொடக்ஷன் மற்றும் அல்டா குளோபல் மீடியா இணைந்து தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











