Priyanka Chopra: ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா.. எந்த படத்துக்கு தெரியுமா?

மும்பை: ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு ஏன் சம்பளம் கொடுப்பதில்லை என்கிற கேள்வியை பல ஆண்டுகளாக முன்னிறுத்தி வந்த நடிகை பிரியங்கா சோப்ரா கடைசியாக ஒரு படத்தில் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹீரோக்களின் சம்பளம் 100 கோடிக்கு மேல் ஒரு பக்கம் அதிகரித்தாலும், இந்தியாவில் முன்னணி நடிகையாக திகழும் தீபிகா படுகோன் ஒரு படத்துக்கு 12 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறார்.

நயன்தாரா 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். இந்நிலையில், ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை பிரியங்கா சோப்ரா சிட்டாடல் வெப்சீரிஸில் பெற்றுள்ளாராம்.

Priyanka Chopra is finally receives the same as male co-star in Citadel web series

ஹீரோவுக்கு 100 கோடி ஹீரோயினுக்கு 10 கோடி: ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமா நடிகர்கள் 100 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா 10 கோடி தான் வாங்குகிறார்.

அதே போல பாலிவுட் ஹீரோக்களும் 100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்கினாலும், தீபிகா படுகோன், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் சம்பளம் வெறும் 12 கோடியை தாண்டாது என்கின்றனர்.

Priyanka Chopra is finally receives the same as male co-star in Citadel web series

ஹீரோவுக்கு நிகரான சம்பளம்: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வாரம் ஒரு எபிசோடுகளாக வெளியாகி வரும் சிட்டாடல் வெப்சீரிஸில் தான் அந்த மேஜிக் நடந்திருப்பதாக கூறுகின்றனர்.

சிட்டாடல் வெப்சீரிஸில் ஹீரோ ரிச்சர்ட் மேடனுக்கு இணையான கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் நிலையில், அந்த வெப்சீரிஸின் தயாரிப்பு நிறுவனம் இருவருக்கும் இணையான சம்பளத்தை வழங்கி உள்ளதாம்.

சம்பளம் எவ்வளவு?: 300 மில்லியன் டாலரில் சிட்டாடல் வெப்சீரிஸ் ரொம்பவே பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஓடிடியில் ரிலீஸ் செய்தே அந்த பட்ஜெட்டை வசூல் செய்து விடும் அளவுக்கு பக்காவான வேலைகளை படக்குழுவினர் பார்த்துள்ளனர்.

இதில், நடித்துள்ள ஹீரோ ரிச்சர்ட் மேடன் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தலா 10 மில்லியன் டாலர் சம்பளம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மதிப்பு படி தலா 80 கோடி ரூபாய் சம்பளம் இருவருக்கும் வழங்கப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். அதனால் தான் ஆடைகளை துறந்து விட்டு டாப்லெஸ் ஆகவும் லிப் லாக் காட்சிகளிலும் எல்லை மீறிய படுக்கையறை காட்சிகளிலும் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா என்கின்றனர்.

Priyanka Chopra is finally receives the same as male co-star in Citadel web series

இணையான சம்பளம் ஏன் இல்லை?: ஹீரோவுக்கு இணையான சம்பளம் ஹீரோயின்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை என்கிற கேள்விக்கு சினிமா வட்டாரத்தில் இருந்து வரும் ஒரே பதில் இது தான்.

ஹீரோவால் தான் பல படங்கள் ஓடுகின்றன. அதிக வசூல் வருகின்றன. ஹீரோவுக்கு இணையாக சோலோவாக ஹீரோயின்கள் நடித்து வெளியாகும் படங்களும் 100 கோடிக்கு அதிகமாக பிசினஸ் செய்தால் அவர்களுக்கும் ஹீரோக்களுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்படும் என்றும் இதில் பாலின பாகுபாடுகள் ஏதும் பார்க்கப்படுவதில்லை. எல்லாமே பக்கா பிசினஸ் தான் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X