'சீட்டடெல்' வெப் தொடரின் டிரைலர் வெளியானது.. அடிதடி ஆக்ஷனில் மிரட்டிய பிரியங்கா சோப்ரா!

சென்னை : பிரியங்கா சோப்ரா நடித்திருக்கும் சீட்டடெல் வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அந்த டிரைலர் வெப் தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சீட்டடெல் வெப் தொடரில், பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் ஆகியோர் இரட்டை கதாபாத்திரங்களாக சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த உணர்ச்சி மிகுந்த திரைப்படத்தைத் ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO மற்றும் ஷோரன்னராக டேவிட் வெயில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சீட்டடெல்

சீட்டடெல்

சீட்டடெல் வெப் சீரிஸில்,நதியா சிங்காக பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் , பெர்னார்ட் ஓர்லிக்காக ஸ்டான்லி டூசி, டாலியா ஆர்ச்சராக லெஸ்லி மான்வில்லே, கார்ட்டர் ஸ்பென்ஸாக ஓஸி இகிலே, அபே கன்ராய் ஆக ஆஷ்லே கம்மிங்ஸ்ஸும் வும், ஆண்டர்ஸ் சில்ஜே மற்றும் டாவிக் சில்ஜே ஆக ரோலண்ட் முல்லர், ஹென்ட்ரிக்ஸ் கான்ராய் ஆக கயோலின் ஸ்பிரிங்கால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 28ந் தேதி முதல்

ஏப்ரல் 28ந் தேதி முதல்

ஆறு எபிசோடுகள் கொண்ட அந்த முதல் சீசன், ஏப்ரல் 28 ஆம் தேதி அமேசான் பிரைமியில் முதல் இரண்டு எபிசோடுகளுடன் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து மே மாதம் முழுவதும் 26 ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய எபிசோடு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீட்டடெல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

இதையடுத்து, சீட்டடெல் வெப் தொடரின் டிரைலர் நேற்று வெளியானது. அதில், உளவுத் துறை அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்) இருவரும் விபத்து ஒன்றில் சிக்கி தங்களது கடந்த கால நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால், நினைவுகளை இழந்த ரிச்சர்ட் மேடனின் இதயத்தில் பதிந்த ஒரே முகம் நதியா சின், அவரை சந்தித்து அனைத்தையும் நினைவுபடுத்த முயற்சி செய்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த தொடரின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

அதிரடி சண்டை காட்சிகள்

அதிரடி சண்டை காட்சிகள்

பிரம்மாண்டமான இந்த வெப் தொடரில் நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா, அதில் சிக்கலான பல கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் கடந்தகாலம், நிகழ்காலம் என இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இதை பார்ப்பதற்கு சற்று பைத்தியக்காரத்தனமாக இருக்கும் என்றார் பிரியங்கா சோப்ரா.தொடர்ந்து பேசிய பிரியங்கா சோப்ரா, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இந்த வெப் தொடரில்,சண்டை காட்சியின் போது ஏற்பட்ட காயத்தின் வடுவை காட்டினார்.

அட்டகாசமான நடிப்பு

அட்டகாசமான நடிப்பு

இதைத்தொடர்ந்து பேசிய, ரிச்சர்ட் மேடன், அந்த படத்தில் அனுபவம் வித்தியாசமாக இருந்தது, கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் ஒரே நேரத்தில் நடித்தது சவால் நிறைந்ததாக இருந்தது என்றார். இதில், பிரியங்கா சோப்ராவின் நதியா கதாபாத்திரம் எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால், மொத்த கதையை அவர் தனது தோளில் சுமந்துள்ளார் என்று பிரியங்கா சோப்ராவை அவர் வெகுவாக பாராட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X